சிவகார்த்திகேயனின் மகளும் – இசை உலகுக்கு!!

முதன்முதலாக, எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் எனும் பெயரில் சிவகார்த்திகேயன் படம் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் பெயர் கனா. நெருப்புடா முதலான பாடல்களைப் பாடியவரும்
பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

கிராமத்துப் பின்னணியில் தொடங்கி நகரங்களுக்குள் சென்று திரும்புகிற கதை இது.

கனா படத்துக்காக, சிவகார்த்திகேயனின் நான்கரை வயதுச் சிறுமி ஆராதனா ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். ‘வாயாடி பெத்த புள்ள யாரவ…’ என்று தொடங்கும் அந்தப் பாடலை ஆராதனா பாடுகிற வீடியோ
வெளியிடப்பட்டுள்ளது.

You might also like