சீனப் பொருளாதார உயர்வின் அதிசயம்!!

சீனத்­தில் 1978ஆம் ஆண்டு டிசெம்­ப­ரில் நடந்த சீன கம்­யூ­னிஸ்ட் கட்சி மத்­தி­யக் குழு­வின் பதி­னோ­ரா­வது மாநாடு, எதைப் பற்­றி­யது என்­பது வேண்­டு­மா­னால் உல­குக்­குத் தெரி­யா­மல் இருந்­தி­ருக்­க­லாம். ஆனால், அது ஏற்­ப­டுத்­திய விளை­வு­கள், உல­கம் முழு­வ­தும் பெரும் நில அதிர்­வைப் போல இன்­ன­மும் உண­ரப்­பட்­டு­வ­ரு­கி­றது. வேளாண்­சார் நாடாக இருந்­த­தைத் தொழி­லுற்­பத்தி ஆற்­றல் மைய­மாக டெங் சியோ­பிங் தொடங்­கிய ‘(பொரு­ளா­தார) சீர்­தி­ருத்­தம் – திறந்­து­வி­டல்’ கொள்­கை­யா­னது மாற்­றி­யுள்­ளது. அது மட்­டு­மின்றி, உல­கப் பொரு­ளா­தா­ரத்­தையே கட்­ட­மைக்­கும் நாடாக சீன வளர உத­வு­கி­றது.
பொரு­ளா­தா­ரச் சீர்­தி­ருத்­தத்­தின் 40ஆவது ஆண்டு விழா­வைச் சீனா கொண்­டா­டு­கி­றது. உல­கி­லேயே அதிக அந்­நி­யச் செலா­வ­ணியை (ஒக்ரோபர் கணக்­குப்­படி, 3.05 லட்­சம் கோடி டொலர்­கள்) கையி­ருப்­பாக வைத்­தி­ருக்­கும் ஒரே நாடு சீனா­தான். 2017ஆம் ஆண்­டின் தர­வு­க­ளின்­படி, அதன் ஜிடிபி 12.2 லட்­சம் கோடி டொலர்­கள். உல­கின் இரண்­டா­வது பெரிய பொரு­ளா­தார நாடு சீனா. சர்­வா­தி­கார ஆட்­சி­ய­மைப்­பைக் கொண்ட சீனத்­தால், பொரு­ளா­தா­ரச் சீர்­தி­ருத்­தம் சாத்­தி­ய­மில்லை என்று மேற்­கு­ல­கப் பண்­டி­தர்­கள் கூறி­வந்­தது பலிக்­க­வில்லை.

முரண்­பா­டு­கள்
நிரம்­பிய நாடு
இப்­போ­தைய சீனத்­தின் வெவ்வேறு துறை­களை ஒப்­பிட்­டால், அது முரண்­பா­டு­க­ளின் மொத்த கல­வை­போ­லத் தெரி­யும். சீனத்தை ஆளும் கம்­யூ­னிஸ்ட் கட்சி சமத்­து­வப் பொரு­ளா­தா­ரத்­தைப் பேசு­கி­றது. ஆனால் சமூ­கமோ, அச­மத்­து­வமே அடை­யா­ள­மாய்க் கொண்ட முத­லா­ளித்­து­வத்­தால் உந்­தப்­ப­டு­கி­றது.

நகர்ப்­புற நடுத்­தர வர்க்­கத்­தின் பொரு­ளா­தார நலன்­கள், கிரா­மப்­புற விவ­சா­யி­கள் – வேலைக்­காக இடம்­பெ­ய­ரும் தொழி­லா­ளர்­க­ளின் நலன்­க­ளு­டன் முரண்­ப­டு­கி­றது. உல­கி­லேயே மிக அதி­க­மாக 77.2 கோடி இணை­ய­தள இணைப்­பு­கள் சீனத்­தில்­தான் உள்­ளன. உல­கின் மொத்த மின்­வணி­ கத்­தில் 40 வீதம் சீனத்­தில்­தான் நடக்­கி­றது. உல­கி­லேயே டிஜிட்­டல் நடை­மு­றை­கள் அதி­கம் தணிக்­கைக்­குள்­ளா­கும் நாடும் சீனா­தான்.

வட்­டத்­தைச் சது­ர­மாக்­கும் கலை­யில் வல்­ல­மை­பெற்ற சீன கம்­யூ­னிஸ்ட் கட்சி, சீனத்­தில் பொரு­ளா­தா­ரச் சீர்­தி­ருத்­தம் வெற்­றி­பெ­றாது என்ற கணிப்­பு­க­ளைப் பொய்­யாக்­கி­யது. இதைச் சாத்­தி­ய­மாக்­கி­யது டெங் சியோ­பிங் காலத்­தில் நடை­மு­றைக்கு வந்த முன்­னோ­டித் திட்­ட­மா­கும். ‘ஆற்­றைக் கடக்­கும்­போது கற்­க­ளைக் காலால் தடவி நடப்­ப­து­போல’ என்று அதற்கு அவர் பெய­ரிட்­டார். தேச அள­வில் ஒரு திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தும் முன், உள்­ளூர் அள­வில் அதை நடை­மு­றைப்­ப­டுத்­திச் சாத­க-­­பா­த­கங்­க­ளைத் தெரிந்­து­கொள்­ளச் செய்­தார்.

சீனக் கட­லோர நக­ரங்­க­ளில் சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­கள் 1980களில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. அவை தொழி­லுற்­பத்தி தொடர்­பான சோத­னைச் சாலை­க­ளா­கவே இயக்­கப்­பட்­டன. அவை பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான மூல­விசை­ யாகச் செயல்­பட்­டன. ஷென்­ஷென் போன்ற மீன்­பி­டிக் குப்­பங்­கள்­கூட உல­க­ளா­விய உற்­பத்தி நக­ரங்­க­ளாக வளர்ச்­சி­ பெற்­றன. ஒவ்­வொரு கொள்­கை­யும் இப்­ப­டித்­தான் உள்­ளூர் அள­வில் சோதிக்­கப்­பட்டு, பிறகு விரி­வு­ப­டுத்­த ப்­பட்­டன. மருத்­துவ நலத் திட்­டங்­கள் கூட்­டு­ற­வுத் துறை­யில் முயன்­று­பார்க்­கப்­பட்­டன.

தொழி­லா­ளர்­கள் ஒரு மாநி­லத்­தி­லி­ருந்து இன்­னொரு மாநி­லத்­துக்கு இடம்­பெ­யர விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை­கள் விலக்­கப்­பட்­டன. மாசே­துங் காலத்­தில் 1950கள் முதல் 1970கள் வரை­யில் நடந்த சித்­தாந்த ஒடுக்­கு­மு­றை­க­ளுக்கு விடை­கொ­டுக்­கப்­பட்டு, காரிய சாத்­தி­ய­மான வகை­யில் தொழி­லா­ளர்­க­ளின் சக்தி பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.
கட்­சி­யின் அதி­கா­ரத்­தைக் காப்­பாற்ற வேண்­டும் என்­றால், பொரு­ளா­தார வளர்ச்­சி­யின் பயன்­களை வாக்­கு­றுதி தந்­த­படி நிறை­வேற்­றி­யாக வேண்­டும். மத்­தி­ய­தர வர்க்­கம் தங்­க­ளு­டைய வாழ்க்­கைத் தரம் மேம்­பட வேண்­டும் என்று கோரி­யது. அதை­யொட்டி நக­ரங்­க­ளின் சுற்­றுச்­சூ­ழலை மேம்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களை அரசு எடுத்­தது. பெய்­ஜிங் மாந­க­ரத்­தின் சூழல் அதற்­குச் சான்று. டெல்லி போன்ற மாந­க­ரங்­கள் பின்­பற்­றும் வகை­யில் நக­ரின் மாசு குறைக்­கப்­பட்டி­ ருக்­கி­றது.

சித்­தாந்­தத்தை விட­வும்
செயற்­பாட்­டுக்கு முக்­கி­யம்
சீர்­தி­ருத்த நடை­மு­றைக்­குப் பிந்­தைய காலத்­தில் சமூக, பொரு­ளா­தா­ரத் தளங்­க­ளில் ஏற்­பட்­டுள்ள சவால்­க­ளைத் தீர்க்­கும் நட­வ­டிக்­கை­க­ளில் சீனத் தலை­வர்­கள் அக்­கறை செலுத்­தி­வ­ரு­கின்­ற­னர். சர்­வா­தி­கார அர­சு­க­ளில் இப்­ப­டி­யொரு செய­லைக் காண முடி­யாது. சீர்­தி­ருத்­தம் பொரு­ளா­தா­ரத் தளத்­தோடு நிற்­கா­மல் அரசு நிர்­வா­கம், அர­சுக் கட்­ட­மைப்பு ஆகி­ய­வற்­றி­லும் பர­வி­யி­ருக்­கி­றது. அரசு அதி­கா­ரி­கள் முக்­கி­யப் பத­வி­களை இத்­தனை முறை­தான் வகிக்­க­லாம் என்ற கட்­டுப்­பா­டும், ஓய்வு வயது நிர்­ண­ய­மும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.

சீர்­தி­ருத்­தத்­தில் சித்­தாந்­தத்­தை­விட செயல்­பாட்­டுக்கே முக்­கி­யத்­து­வம் தரப்­ப­டு­கி­றது. இந்­தியா போன்ற நாடு­கள் வளர்ச்­சி­யில் ஏன் பின்­தங்­கியி­ ருக்­கின்­றன என்­ப­தைச் சீனத்­தில் சீர்­தி­ருத்­தம் நடை­மு­றை­யா­கும் விதத்­தைப் பார்த்­தால் புரிந்­து­கொள்­ள­லாம். ஜன­நா­யக ரீதி­யா­கச் செயல்­ப­டு­கி­றோம் என்று கூறி, திட்­டங்­களை முழு­மை­யா­கச் செயல்­ப­டுத்­தா­மல் இருப்­ப­தற்கு இந்­திய அர­சால் சமா­தா­னம் சொல்ல முடி­யும். சீன கம்­யூ­னிஸ்ட் கட்சி ஒரு செயலை மேற்­கொண்­டால், அதை நிறை­வேற்­றா­மல் இருக்க முடி­யாது. இந்­தி­யா­வில் அர­சி­ய­லில் ஏழை­க­ளுக்­குப் பிர­தி­நி­தித்து­ வம் இருந்­தா­லும் சீர்­தி­ருத்­தங்­க­ளின் பயன்­கள் அவர்­க­ளுக்­குக் கிடைப்­ப­தில்லை. அர­சி­யல் பங்­கேற்பு இல்­லை­யென்­றா­லும், அனை­வ­ருக்­கும் சீர்­தி­ருத்­தப் பயன்­கள் சீனத்­தில் கிடைத்­து­வி­டு­ கின்­றன. சாலை­கள், கழி­வு­நீர் வாய்க்­கால்­கள், பள்­ளிக்­கூ­டங்­கள் ஆகி­யவை சீனத்­தில் அனை­வ­ருக்­கும் உறு­தி­செய்­யப்­ப­டு­கின்­றன.

ஜி ஜின்­பிங் சகாப்­தம்
டெங் சியோ­பிங் காலத்­தில் தொடங்­கிய ‘சீர்­தி­ருத்­தம் – திறந்­து­வி­டல்’ கொள்­கையை முழு­மை­ யா­கப் புரிந்­து­ கொண்­டால்­தான், சீனம் இன்­றைக்கு அடைந்­தி­ருக்­கும் முன்­னேற்­றத்­தை­யும் புரிந்­து­கொள்ள முடி­யும். ஜி ஜின்­பிங் காலத்­தி­லும் அது எப்­ப­டித் தேவைப்­ப­டு­கி­றது என்­ப­தும் விடை காணப்­பட வேண்­டிய கேள்வி. பொரு­ளா­தார தாரா­ள­ம­யத்தை மேலும் விரி­வு­ ப­டுத்­து­வ­தில் சீனத்­துக்கு உறு­தி­யி­ருந்­தா­லும், அமெ­ரிக்கா தொடங்­கி­யுள்ள வர்த்­த­கப் போர், சீன அர­சைத் தொடர்ந்து கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய நிலை­மைக்­குத் தள்­ளி­யி­ருக்­கி­றது. பொரு­ளா­தா­ரத்­தைச் சீன அரசு கட்­டுப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கும் அதே நேரத்­தில், சந்­தை­கள் மட்­டும் அனை­வ­ருக்­கும் திறந்­துவி­ டப்­பட்­டுள்­ளது. ‘சீன அடை­யா­ளங்­க­ளோடு கூடிய சோச­லி­சம்’ என்று சீனத்­தில் இதை அழைக்­கி­றார்­கள்.

டெங் உத்­வே­கப்­ப­டுத்­திய கொள்­கை­க­ளி­லி­ருந்து சீனம் வில­க­வும் செய்­தி­ருக்­கி­றது. அதி­பர் பத­வி­யில் ஒரு­வர் தொடர்ந்து இரு முறை­தான் இருக்­க­லாம் என்ற விதி சமீ­பத்­தில் நீக்­கப்­பட்டு­ விட்­டது. இத­னால், ஜி ஜின்­பிங் கால­வ­ரம்­பின்றி வாழ்­நாள் முழுக்க அதி­ப­ராக நீடிக்க முடி­யும். ‘பொரு­ளா­தார நட­வ­டிக்­கைளை வெளிப்­ப­டை­யாக மேற்­கொள்­ளுங்­கள், வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்த நிபு­ணர்­க­ளை­யும் வேலைக்கு அமர்த்­திக்­கொள்­ளுங்­கள்’ என்று டெங் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார். ‘சுயச்­சார்பு அவ­சி­யம், வெளி­நாட்டு விரோத சக்­தி­க­ளி­டம் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும்’ என்று எச்­ச­ரிக்­கி­றார் ஜி ஜின்­பிங்.

‘பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை அமை­தி­யாக ஒருங்­கி­ணைக்க வேண்­டும்’ என்­றார் டெங். ஆனால், இப்­போதோ வர்த்­த­கப் போட்­டி­யால் ‘புதிய பனிப் போர்’ தொடங்­கும் ஆபத்து நில­வு­கி­றது. ‘ஆற்­றலை மறைத்­துக்­கொண்டு உரிய நேரத்­துக்­கா­கக் காத்­தி­ருக்க வேண்­டும்’ என்­றார் டெங். அதில் தேசிய உணர்வு கலந்­தி­ருந்­தது. டெங் காலத்­தில் முன்­னோ­டித் திட்­டம் உள்­ளூர் அள­வில் பரி­சீ­லிக்­கப்­ப­டு­வ­தாக அதி­கம் இருந்­தது. 2010ஆம் ஆண்­டில் 500 கொள்­கை­சார் திட்­டங்­கள் பரி­சோ­த­னை­யில் இருந்­தன. 2016ஆம் ஆண்­டில் அது 70 ஆகச் சுருங்­கி­விட்­டது.

‘சீர்­தி­ருத்­தம் – திறந்­து­வி­டல்’ என்ற கொள்­கைக்­கான காலம் மலை­யே­றி­விட்­டதா? அப்­ப­டி­யென்­றால், எது அதன் இடத்­தைப் பிடிக்­கப்­போ­கி­றது? அமெ­ரிக்கா மற்­றும் அதைப் போன்ற நாடு­க­ளு­ட­னான போட்­டி­யைச் சீனா எப்­படி எதிர்­கொள்­ளப்­போ­கி­றது? இந்­தக் கேள்­விக்­கான விடை­கள் இன்­னும் தெளி­வா­க­வில்லை. சீன கம்­யூ­னிஸ்ட் கட்சி மிக­வும் கவ­னத்­து­டன் அடி­யெ­டுத்­து­வைக்க வேண்­டும் என்­பது மட்­டும் நிச்­ச­யம்.

You might also like