side Add

சுதந்திரமிழந்த நாட்டின் சுதந்திர தினம்!!

கடந்த நான்­காம் திகதி இலங்­கை­யின் சுதந்­தி­ர­தி­னம் வெகு­வி­ம­ரி­சை­யா­கக் கொண்­டா­டப்­பட்­டது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் உட்­பட அர­சி­யல் பிர­மு­கர்­க­ளும், முப்­ப­டைத்­த­ள­ப­தி­கள், பொலிஸ் மா அதி­பர் உட்­பட ஆயு­தப்­ப­டை­யி­ன­ரும் கலந்­து­கொண்டு அதை ஒரு தேசிய விழா­வாக வெளிக்­காட்­டி­யி­ருந்­த­னர்.

முன்­னாள் அரச தலை­வர்­கள் கலந்து கொள்­வது ஒரு மர­பா­கப் பேணப்­பட்டு வந்த போதி­லும் திரு­மதி சந்­தி­ரிகா விஜ­ய­கு­மா­ர­ண­துங்க இதில் கலந்து கொள்­ள­வில்லை. முப்­ப­டை­க­ளின் அதி உயர் பட்­டம் பெற்­ற­வ­ரான பீல்ட் மார்­ஷல் சரத் பொன்­சே­கா­வும் சமூ­க­ம­ளிக்­க­வில்லை என்­பவை குறிப்­பி டத்­தக்­கவை. எப்­ப­டி­யி­ருப்­பி­னம் இரா­ணுவ அணி­வ­குப்பு, வானூர்­தி­க­ளின் சாகச விளை­யாட்­டு­கள், அரச தலை­வ­ரின் உரை, விழ­வின் ஆரம்­பத்­தில் சிங்­க­ளத்­தி­லும் நிறை­வின்­போது தமி­ழி­லும் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டமை போன்­றவை சம்­பி­ர­தா­ய­பூர்­மாக இடம்­பெற்று நிகழ்­வைச் சிறப்­பித்­தன.

நாடு முழு­தும் வாரக் கணக்­கில்
சுதந்­தி­ரத்­தைக் கொண்­டா­டும் ஜப்­பான்
ஜப்­பான் நாட்­டில் சுதந்­திர தினத்­தை­யொட் டிய விழா ஒரு வாரத்­துக்கு மிக­வும் சிறப்­பான முறை­யில் கொண்­டாப்­ப­டும். அந்த நாள்­க­ளில் ஜப்­பா­னில் ஓர்­கிட், ஐந்­தூ­ரி­யம் உட்­பட அழ­கிய மலர்­கள் பூத்­துக் குலுங்­கு­மெ­ன­வும், முழு நாடும் மலர்­கள் நிறைந்த நந்­த­வ­ன­மா­கக் காட்­சி­ய­ளிக்­கு­மெ­ன­வும், அவற்­றைக் கண்டு களிக்க வரும்­ப­டி­யும் ஜப்பானியர்கள் வௌிநாட்டி லுள்ள தமது நண்பர்களுக்கு அழைப்பு விடுப்­பர். அந்த ஒரு வாரத்­தில் பாரம்­ப­ரிய கலை நிகழ்­வு­கள், வான­வே­டிக்­கை­கள், தற்­காப்­புக் கலை உட்­படப் பாரம்­ப­ரிய வீர விளை­யாட்­டுக்­க­ளின் காட்­சிப்­ப­டுத்­தல்­கள், கலை­ந­யம்­மிக்க வான­வே­டிக்­கை­கள், உற­வி­னர் வீடு­க­ளுக்­குச் சென்று விருந்­துண்­ணல் என ஜப்­பான் எங்­கும் ஆனந்­தக் களி­யாட்­டங்­கள் கோலோச்­சும். வெளி­நாட்­டி­லி­ருந்து செல்­ப­வர்­கள் அழ­கிய ஆனந்­த­மான ஜப்­பா­னைக் கண்டு தாமும் அதில் கலந்து மகிழ்ச்­சி­ய­டை­வர். இந்த முறை சுதந்­திர நிகழ்­வின்­போது இலங்­கைக்கு வந்­தி­ருந்த வெளி­நாட்­ட­வர்­கள் கண்­டி­ருக்கக் கூ­டிய காட்­சி­களோ ஜப்­பா­னில் அவர்­கள் அனு­ப­வித்­த­வைக்கு நேரெ­ தி­ரா­னவையாகவே அமைந்­தி­ருக்­கும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை.

சுதந்­திர தினக் கொண்­டாட்­ட­மும்
மறு­பு­றம் நிகழ்ந்த போராட்­ட­மும்
காலி முகத்­தி­ட­லில் பறந்து கொண்­டி­ருந்த வாளேந்­திய சிங்­கக் கொடி­க­ளின் நடுவே சுதந்­திர தின வைப­வம் நடந்து கொண்­டி­ருந்­த­போது அந்த இடத்­துக்கு அண்­மை­யில் அமைந்­தி­ருந்த துறை­மு­கத்­தில் நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தையே உலுக்­கக் கூடிய சுங்­கத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளின் போராட்­டம் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருந்­தது. ஏற்­று­மதி, இறக்­கு­ம­தியை நம்­பி­யுள்ள தாரா­ள­வா­தப் பொரு­ளா­தா­ரத்­தில் சுங்­கத் திணைக்­க­ளம் ஒரு மைய அலகு என்­பது சாதா­ரண குடிமகன் கூட அறிந்த விட­ய­மா­கும்.

இந்த வேலை நிறுத்­த­மா­னது சுங்­கத் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர், அவ­ரு­டைய பத­வி­யி­ருந்து அகற்­றப்­பட்­ட­தற்கு எதி­ரா­ன­தாக வெளிப்­ப­டை­யா­கத் தோன்­றி­னா­லும் வெளி­யான சில தக­வல்­க­ளின்­படி இது இலங்­கை­யின் சுயா­தி­ பத்­தி­யத்­துக்கு எதி­ரான ஒரு சவால் என்றே தெரிய வரு­கி­றது. வெளி­நாடு ஒன்­றி­லி­ருந்து வானூர்தி மூலம் கட்­டு­நா­யக்கா வானூர்தி நிலை­யத்­துக்­குக் கொண்டு வரப்­பட்ட பெருந்­தொ­கை­யான ஆயு­தங்­கள் சுங்க அதி­கா­ரி­க­ளின் பார்­வைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டா­மலே சிறிய வானூர்­தி­கள் மூலம் நடுக்­க­ட­லில் உள்ள ஒரு கப்­ப­லுக்கு மாற்­றப்­பட்­டன.

இது சுங்க விதி­களை மீறிய ஒரு நட­வ­டிக்கை என்­ப­தால் சுங்­கத் திணைக்­க­ளப் பணிப்­பா­ளர் திரு­மதி. பி.எம்.எம்.சார்ள்ஸ் கேள்வி எழுப்­பி­ய­தா­க­வும், அவர் கேள்வியெழுப்பியமை பாது­காப்­புத் தொடர்­பான ஒப்­பந்­தங்­க­ளின் இர­க­சி­யங்­களை மீறும் செயல் என அமெ­ரிக்­கத் தரப்பு அதி­ருப்தி தெரி­வித்­த­தா­க­வும், அதன் கார­ண­மா­கவே பி.எம்.எம்.சார்ள்ஸ் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­ தா­க­வும் தக­வல்­கள் வெளி­யா­கின. அவர் நீக்­கப்­பட்ட பின்பு ரியல் அட்­மி­றல் சோமல் பெர்­னாண்டோ அந்­தப் பத­விக்கு நிய­மிக்­கப்­பட்­டார்.

இதற்­குப் பல தரப்­பு­க­ளா­லும் வலு­வாக எதிர்ப்­புத் தெரி­விக்­கப்­பட்­டது. சுங்க அதி­கா­ரி­க­ளின் போராட்­டம் தொடர்ந்­தது. இதைத் திரு­மதி சார்ள்சை மீள்­நி­ய­ம­ னம் செய்­வ­தற்­கான போராட்­ட­மாக மட்­டும் கருத முடி­யாது. அடிப்­ப­டை­யில் இது எமது நாட்­டின் சட்ட திட்­டத்­தைப் பேண முயன்ற அதி­காரி ஒரு­வரை வெளி­நாட்­டின் அழுத்­தத்­தின் பேரில் பதவி நீக்­கி­ய­ மையே. இது இந்த நாட்­டின் சுயா­தி­பத்­தி­ யத்தை மறு­த­லிக்­கும் செய­லா­கும். திரு­மதி சாள்சை அதே பத­வி­யில் நிய­மிப்­ப­தற்கு அமைச்­ச­ரவை முடி­வெ­டுத்­தி­ருந்­தது. எப்­ப­டி­யி­ருப்­பி­னும் ஒரு­பு­றம் சுதந்­திர தின விழா­வைச் சிறப்­பித்­துக்­கொண்டு மறு­பு­றம் அதை அவ­ம­திக்­கும் வகை­யில் நடந்­து­கொண்­ட­மையே இந்­தச் சம்­ப­வத்­தின் சாரம் என்­பது தெளிவு.

சுதந்­தி­ரப் பறிப்­பின் ஆரம்­பம்
இலங்கை மக்­க­ளின் சுதந்­தி­ரம் பறிக்­கப்­ப­டு­வ­தா­னது 1978ஆம் ஆண்டு இலங்­கை­யின் அரச தலை­வ­ராக இருந்த ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­ன­வால் கொண்­டு­வ­ரப்­பட்ட புதிய அர­ச­மைப்­பு­டன் ஆரம்­பிக்­கப்­பட்­டு­விட்­டது.
அந்­நிய முத­லீ­டு­க­ளைக் கவர்­வது என்ற பெய­ரில் வெளி­நாட்டு முத­லீட்­டா­ ளர்­க­ளுக்­கா­கச் சுதந்­திர வர்த்­தக வல­யம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. சுதந்­திர வர்த்­தக வல­யத்­தி­லுள்ள தொழில் நிறு­வ­னங்­க­ளில் பணி­பு­ரி­வோர் தமது கோரிக்­கை­களை முன்­வைத்து வேலை­நி­றுத்­தம் செய்ய முடி­யாது.
அப்­படி வேலை நிறுத்­தத்­தில் ஈடு­பட்­டால் அது சட்­ட­வி­ரோ­தம். போதிய சம்­ப­ளம் வழங்­காமை உட்­ப­டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இழைக்­கப்­ப­டும் அநீ­தி­க­ளுக்கு எதி­ரா­கப் போரா­டத் தொழி­லா­ளர்­க­ளி­டம் உள்ள ஒரே ஆயு­தம் வேலை நிறுத்­தம்.

அந்­தச் சுதந்­தி­ரம் அன்றே அந்­தத் தொழி­லா­ளர்­க­ளி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்­டு­விட்­டது. இது இன்­று­வரை மாறி­ய­தாக இல்லை. பின்­வந்த மகிந்­த­வின் ஆட்­சிக் காலத்­தில் சில கோரிக்­கை­களை முன்­வைத்து ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­ய­போது பொலி­ஸார் மேற்­கொண்ட துப்­பாக்­கிச் சூட்­டில் ஒரு­வர் கொல்­லப்­பட்­ட­மை­யும் பலர் காய­ம­டைந்­த­மை­யும் மறந்­து­விட முடி­யாது. இதில் நகைப்பு என்­ன­வெ­னில் அந்­தத் தொழி­லா­ளர்­க­ளும் தாங்­கள் சுதந்­திர தேசத்­தின் மக்­கள் என இன்­று­வரை நம்­பிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

போலிச் சுதந்­தி­ரமே நில­வு­கி­றது
கடந்த ஒக்­ரோ­பர் மாதம் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வைத் தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டு மகிந்த ராஜ­பக்­ச­வைத் தலைமை அமைச்­ச­ராக நிய­மித்­தது, நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்து உட்­பட அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் நட­வ­டிக்­கை­களை, இலங்­கை­யின் சுதந்­தி­ர­மான செயற்­பாட்டை, அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றி­யம், ஜப்­பான் ஆகிய நாடு­கள் தங்­கள் கையில் எடுப்­ப­தற்­குப் பல வழி­க­ளி­லும் முயற்­சித்­தன.

குறித்த விட­யத்­தில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அப்­போது நடந்து கொண்ட விதம் தவ­றா­னது என்­பது இறு­தி­யில் நீதி­மன்­றத் தீர்ப்­பின் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டா­லும், நாட்­டின் அரச தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன எவ்­வாறு வல்­ல­ர­சு­க­ளால் சுற்றி வளைக்­கப்­பட்­டுத் தோற்­க­டிக்­கப்­பட்­டார் என்­ப­தை­யும் குறித்த சம்­ப­வம் நாட்டு மக்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இலங்கை உண்­மை­யில் சுதந்­தி­ர­மாக இல்லை என்­ப­தையே அது வெளிப்­ப­டுத்­தி­யது. மைத்­தி­ரி­யின் அதி­ர­டியை அடுத்து மகிந்த புதிய அமைச்­ச­ர­வையை உரு­வாக்­கும் முயற்­சி­க­ளில் இறங்­கி­ய­தும், நெடுஞ்­சா­லை­கள் அமைப்­ப­தற்கு வழங்­கி­வ­ரும் நிதியை இடை­நி­றுத்­து­வ­தாக அமெ­ரிக்கா அறி­வித்­தது.

தொட­ருந்துச் சேவைக்கு வழங்­க­வுள்­ள­தா­கத் தெரி­வித்த நிதியை மறு­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப் போவ­தாக ஜப்­பான் கூறி­யது. ஐரோப்­பிய ஒன்­றி­யம் ஜி.எஸ்.பி. வரிச் சலு­கையை நிறுத்­தி­யது. அதா­வது இலங்­கை­யில் எவர் ஆட்­சி­ய­தி­கா­ரத்­தில் இருப்­பது என்­ப­தைத் தீர்­மா­னிக்­கு­ ம­ள­வுக்கு இலங்­கை­யின் சுதந்­தி­ரம் பல­வீ­ன­மா­னது என்­ப­தை­யும் அடித்­த­ள­மற்­றது என்­ப­தை­யும் நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள முடி­யும்.
தாரை வார்க்­கப்­பட்­டுள்­ளது நாடு

நாட்­டின் பல கேந்­திர முக்­கி­யத்­து­வம் வாய்ந்த பகு­தி­கள், 99 வரு­டக் குத்­தகை என்ற பெய­ரி­லும், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி ஒப்­பந்­தங்­கள், பாது­காப்பு உடன்­ப­டிக்­கை­கள் என்ற வடி­வங்­க­ளி­லும் அந்­நிய நாடு­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. தொடர்ந்­தும் நாட்­டின் சில பகு­தி­களை வெளி­நா­டு­க­ளுக்கு வழங்­க­வும் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. நான்கு பக்­கங்­க­ளும் கட­லால் சூழப்­பட்ட ஒரு நாட்­டுக்­குத் துறை­மு­கங்­கள், வானூர்தி நிலை­யங்­கள் எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னவை என்­பதை அனை­வ­ரா­லும் புரிந்து கொள்ள முடி­யும். இந்த நிலை­யில் கொழும்­புத்­து­றை­முக நக­ரம், துறை­மு­கத்­தின் தென்­ப­கு­தி­யி­லுள்ள கொள்­க­லன் இறங்­கு­துறை, அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கம் என்­பன சீனா­வுக்கு 99 வரு­டக் குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

15ஆயி­ரம் ஏக்­கர் நிலம் அம்­பாந்­தோட்­டை­யில் கைத்­தொ­ழில் பேட்­டைக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. மத்­த­ளன் வானூர்தி நிலை­யம், பலாலி வானூர்தி நிலை­யம், காங்­கே­சன்­து­றைத் துறை­மு­கம் என்­பன இந்­தி­யா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. அமெ­ரிக்க இரா­ணு­வத்­தின் தக­வல் தொழில்­நுட்­பப் பரி­மாற்­றம், பாது­காப்­புப் பயிற்சி என்­ப­வற்­றுக்­காக இரா­ணு­வத்­த­ளம் அமைப்­ப­தற்­கா­கத் திரு­கோ­ண­ம­லை­யில் 3ஆயி­ரத்து 800 ஏக்­கர் நிலம் வழங்­கப்­ப­டு­வது தொடர்­பா­கக் கடந்த ஒக்­ரோ­பர் மாதம் பேச்­சு­கள் நடந்­தன. மேலும் ஒரு சுதந்­திர வர்த்­தக வல­யம் அமைப்­ப­தற்­காக நிலம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இது கட்­டு­நா­யக்கா சுதந்­திர வர்த்­தக வல­யத்தை விட மூன்று மடங்கு பெரி­ய­தா­கும். இவ்­வாறு நாடு அந்­நிய நாடு­க­ளுக்­குத் தாரை வார்க்­கப்­ப­டும் போது கொழும்­பில் கொண்­டா­டப்­ப­டும் சுதந்­தி­ர­தி­னம் என்­பது ஒரு கேலிக்­கூத்­தா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

மண்­ணை­யும் இறை­மை­யை­யும் ஒரு­பு­றம் வல்­ல­ரசு நாடு­க­ளுக்கு விற்­ப­து­டன் மறு­பு­றம் தமிழ் மக்­க­ளின் சுதந்­தி­ரம் பறிக்­கப்­ப­டு­கி­றது. தமிழ் மக்­க­ளின் காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. அர­சி­யல் கைதி­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வில்லை. காணா­மல் ஆக்கப்பட்டவர்கள்் தொடர்­பான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­ட­வில்லை. இந்த நிலை­யில் வடக்­குக் கிழக்­கில் தமிழ் மக்­கள் இலங்­கை­யின் சுதந்­திர நாளைக் கரி­நா­ளா­கக் கறுப்­புக்­கொ­டி­க­ளேற்­றிக் கடைப்­பி­டித்­தமை தவ­றாக இருக்க முடி­யாது.

தமிழ் மக்­க­ளின் மன உணர்­வு­களை அலட்­சி­யம் செய்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் சுதந்­திர வைப­வத்­தில் பங்கு பற்­றி­ய­தா­க­வும் விமர்­ச­னங்­கள் எழுந்­தன. என­வே­தான் இந்­தச் சுதந்­திர தின வைப­வத்தைச் சுதந்­தி­ர­மி­ழந்த ஒரு நாட்­டின் போலி வைப­வ­மா­கவே கருத முடி­கி­றது.

You might also like