சுப்பர் கிங்ஸ் -– எவஞ்சர்ஸ் ஆட்டம் சமநிலை

வடக்கு –– கிழக்கு பிறீ­மி­யர் லீக் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று ­முன்­தி­னம் இடம்­பெற்ற மட்­டு ­ந­கர் சுப்­பர் கிங்ஸ், அம்­பாறை எவஞ்­சர்ஸ் அணி­க­ளுக்கு இடை ­யி­லான ஆட்­டம் சம­நி­லை­யா­னது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா மைதா­னத்­தில் நேற்­று­முன் தினம் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் மட்­டு­ந­கர் சுப்­பர் கிங்ஸ் அணியை எதிர்த்து அம்­பாறை எவஞ்­சர்ஸ் அணி மோதி­யது.

ஆட்­டத்­தின் 33ஆவது நிமி­டத்­தில் எவஞ்­சர்ஸ் அணி­யின் முத­ லா­வது கோலைப் பதி­வு­செய்­தார் கரூன். அதுவே முதல் பாதி­ யின் ஒரே கோலு­மாக அமைந்­தது. 48ஆவது நிமி­டத்­தில் எவஞ்­சர்ஸ் அணி­யின் இரண்­டா­வது கோல்களி।னால் பதி­வா­னது.

55ஆவது நிமி­டத்­தில் சுப்­பர் கிங்­ஸின் முத­லா­வது கோலைப் பதி­வு­செய்­தார் ஜெய­சூ­ரிய. ஆட்­டம் முடி­வ­தற்கு 5 நிமி­டங்­கள் இருக்­கை­யில் டி.எம்.அனஸ் சுப்­பர் கிங்­ஸின் இரண்­டா­வது கோலைப் பதி­வு­செய்­தார்.

நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி ­க­ளும் தலா 2 கோல்­க­ளைப் பதி­வு­ செய்­ததை அடுத்து ஆட்­டம் சம­நி­லை­யா­னது. கரூன் சிறந்த வீர­ னா­கத் தெரி­வா­னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close