சுயதொழிலுக்கு நிதியுதவியளித்தல் -இளைஞர்களுக்குச் செயலமர்வு!!

திருகோணமலை மூதூர், கிண்ணியா மற்றும் குச்சவெளி போன்ற பிரதேசங்களிலுள்ள தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு, சுயதொழிலுக்கான நிதியுதவியளித்தல் தொடர்பான செயலமர்வு திருகோணமலை சர்வோதய கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

“வங்கிகளின் திட்ட பிரச்சார அமர்வு“ எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற செயலமர்வில், வங்கிகள் ஊடாக சுயதொழிலுக்கான நிதியுதவிக்கான வழிகாட்டல்கள் மற்றும் சுயதொழிலை இலாபமூட்டும் வகையில் எவ்வாறு மேற்கொள்வது, தொழிலைக் கையாளும் முறைகள், வங்களின் செயற்பாடுகள், தொழிலுக்கான முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

யூ.என்.டி.பி.திட்டப்பணிப்பாளர் கே.பார்தீபன்,பீஸ் வின்ஸ் யப்பான் வதிவிட பிரதிநிதி யோகோகவாசி,இலங்கை மத்திய வங்கியின் கிழக்கு மாகாண முகாமையாளர் பிரபாகரன்,மற்றும் கொமர்ஷல்,இலங்கை வங்கி, செலான் வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கிகளின் முகாமையாளர்கள் செயலமர்வில் கலந்து கொண்டனர்.

You might also like