சுற்றுலா சென்ற தந்தையும் மகளும் வாவியில் மாயம்!!

சுற்றுலா சென்ற தந்தையும் மகளும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

மினுவாங்கொட பிரதேசத்தில் இருந்து மின்னேரியா பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற இவர்கள், கிரித்தலே வாவியில் நீராடிக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளனர்.

45 வயதுடைய தந்தையும், 14 வயதுடைய மகளும் இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

பிரதேசவாசிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like