சுழி­பு­ரத்­தில் குடி­தண்­ணீர் விநி­யோ­கம் நேற்று ஆரம்­பம்

140 குடும்­பங்­க­ளுக்கு

சுழி­பு­ரம் மேற்­கில் இடம்­பெ­யர்ந்து மீளக்­கு­டி­ய­மர்ந்த 140 குடும்­பங்­க­ளுக்­கு­மான குடி­தண்­ணீர் விநி­யோ­கத் திட்­டம் நேற்று ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.

திறப்பு நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக வேள்ட்­வி­சன் நிறு­வன தேசிய பணிப்­பா­ளர் கலா­நிதி டனன் சேனா­தி­ராசா கலந்­து­கொண்டு திட்­டத்தை ஆரம்­பித்து வைத்­தார்.

இந்த நெல்­லி­யான்–­­பொன்­னாலை குடி­தண்­ணீர்த் திட்­டம் திறப்பு வலி­கா­மம் மேற்கு பிர­தே­ச­ சபை தவி­சா­ளர் த.நட­னேந்­தி­ரன் தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது. தேசிய பணிப்­பா­ளர் கலா­நிதி டனன் சேனா­தி­ராசா நெல்­லி­யான் குடி­தண் ணீர் திட்­டத்­துக் கான கல்லை திரை­நீக்­கம் செய்­து­வைத்­தார். அவர் அங்கு உரை­யாற்­று­கை­யில்;

வலி­கா­மம் மேற்கு பிர­தே­ச­சபை நிர்­வா­கம் மீளக்­கு­டி­ய­ மர்ந்த மக்­க­ளின் அடிப்­ப­டைத் தேவை­களை மையப்­ப­டுத்தி சேவை செய்­வ­தனை நான் அவ­தா­னித்­துள்­ளேன்.இதன் முதற்­கட்­ட­மாக சுழி­பு­ரம் மேற்­கில் இடம்­பெ­யர்ந்த 140 குடும்­பங்­க­ளுக்­கான குடி­தண்­ணீர் பிரச்­சி­ னையை வலி.மேற்கு பிர­தே­ச­ச­பைத் திட்­டங்­க­ளாக எமக்­குச் சமர்ப்­பித்­தன.

இந்­தத்­திட்­டம் கள­ஆய்வு கற்­கை­நெ­றி­யில் முதன்­மை­யா­ள­ராக தென்­பட்­ட­போது நாம் அதற்­காக 8.9 மில்­லி­யன் ரூபா­வைச் செல­வ­ளித்­தோம். சுழி­பு­ரம் மேற்­கில் மீளக்­கு­டி­ ய­மர்ந்த 140 குடும்­பங்­க ­ளைச் சேர்ந்­தோர் இன்று முதற்­கொண்டு நான்கு தொட்­டி­க­ளின் ஊடாக நன்மை அடை­ய­வுள்­ள­னர்.

திட்­டம் முழுமை பெறு­வ­தற்­காக உழைத்த மாவட்­டச் செய­லர், பிர­தேச செய­லர் தேசிய நீர்­வ­ழங்­கல் வடி­கா­ல­மைப்­புச்­சபை, பிர­தேச சபை­யின் உறுப்­பி­னர்­கள், சமூ­க­மட்ட நிறு­வ­னத் தலை­வர்­கள் மற்­றும் வலி.மேற்கு பிர­தேச சபையை நாம் பாராட்­டு­கின்­றேன் – என்­றார்.

இந்த நிகழ்­வில் கலந்­து­கொண்ட வேள்ட் விசன் நிறு­வன தேசிய பணிப்­பா­ளர் கலா­நிதி டனன் சேனா­தி­ராசா, வேள்ட் விசன் லங்கா நிறு­வன பணிப்­பா­ளர் கிளா­ரன்ய் சுமர்­சன் ஆகி­யோ­ருக்கு வலி­கா­மம் மேற்கு பிர­தேச சபை தவி­சா­ளர் பொன்­னாடை போர்த்தி மாலை அணி­வித்து மதிப்­ப­ளித்­தார்.

தொடர்ந்து சுழி­பு­ரம் மேற்­கில் உள்ள முத­லா­வது தொட்டி குடி­தண்­ணீர் விநி­யோ­கத்தை தேசிய பணிப்­பா­ளர் கலா­நிதி டனன் சேனா­தி­ராசா, பணிப்­பா­ளர் கிளா­ரன்ஸ் சுதர்­சன், வலி.மேற்கு பிர­தே­ச­சபை உறுப்­பி­னர் சி.பால­கி­ருஷ்­ணன், உறுப்­பி­னர் ந.பொன்­ராசா உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­ட­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close