சுவாசக் குழாயிலிருந்து 50 கிராம் இரும்பு- 9 வருடங்களின் பின்னர் அகற்றப்பட்டது!!

ஆட்­லறி வகைக் குண்­டின் சுமார் 50 கிராம் நிறை­யு­டைய இரும்­புப் பகு­தியை 9 வரு­டங்­க­ளா­கச் சுவா­சக் குழா­யில் சுமந்­து­கொண்டு அந்­த­ரித்த இளை­ஞ­னுக்கு யாழ்ப்­பாண போதனா மருத்­து­வ­ம­னை­யில் வெற்­றி­க­ர­மா­கச் சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டுள்­ளது. மருத்­து­வ­மனை வர­லாற்­றில் நீண்ட காலத்­தின்­பின்­னர் இந்த வகைச் சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கிளி­நொச்சி மாவட்­டத்­தைச் சேர்ந்த 30 வய­துக்கு உட்­பட்ட இளை­ஞ­னுக்கே இவ்­வாறு சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டது. முள்­ளி­வாய்க்­கால் இறு­திப் போரில் குண்­டுத் தாக்­கு­த­லில் ஆட்­லறி வகை­யா­னது என்று நம்­பப்­ப­டும் குண்டு வெடித்­த­போது அதன் பகுதி அவ­ருக்­குள் பாய்ந்­துள்­ளது.

அது அவ­ரது வலது தோள்­மூட்­டுக்­குக் கீழே முது­குப் புற­மா­கத் துளைத்­த­வாறு உள்ளே சென்­றுள்­ளது. வவு­னி­யா­வுக்கு பொது­மக்­க­ளு­டன் இடம்­பெ­யர்ந்­தார் அவர். வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றார். அவ­ருக்­குக் குண்­டின் பகுதி தாக்­கி­ய­தா­கக் கரு­தியே சிகிச்சை பெற்­றார்.

“நாள்­கள் சென்­றன, காயம் மாறி­யது. ஆனால் அதன் பின்­னர் என்­னால் பார­தூ­ர­மான வேலை­க­ளைச் செய்ய முடி­ய­ வில்லை. நிமிர்ந்தோ சரிந்தோ படுத்­து­றங்க முடி­யாது, குப்­பு­றவே படுத்து உறங்க முடி­யும். அவ்­வாறு படுத்­தா­லும் இரு­மல் விடாது இருந்­து­கொண்டே இருக்­கும்”
அதன் பின் “இரு­மல், சளித் தொல்லை தாங்­க­மு­டி­யாது 2 வரு­டங்­க­ளின் பின்­னர் 2011 ஆம் ஆண்டு கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னைக்­குச் சிகிச்­சைக்­குச் சென்­றேன்.

அங்கு மருத்­து­வர்­கள் எனது நெஞ்­சுப் பகு­தியை எக்ஸ்ரே எடுத்­துப் பார்த்த பின்­னர்­தான் இரும்­புத் துண்டு ஒன்று எனது நெஞ்­ச­றை­யில் உள்­ளது என்று கூறி­னர். எக்ஸ்ரே கதிர் மூல­மாக எடுத்த படத்­தை­யும் காண்­பித்­த­னர். என்­னால் அதை நம் பவே முடி­ய­ வில்லை” என்­றார் காயமடைந்த இளை­ஞர். பின்­னர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார்.

மேல­திக சிகிச்சைக் காகக் கொழும்­பி­லுள்ள இரண்டு மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றும் சிகிச்சை பெற­மு­டி­யாது திரும்­பி­வ­ர­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

பின்­னர் கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று இன்­று­வரை சிகிச்சை பெற்­று­வந்த அவர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் இரு­தய நெஞ்­சறை சத்­திர சிகிச்­சைப் பிரி­வுக்கு ஒன்­றரை மாதங்­க­ளுக்கு முன்­னர் மாற்­றப்­பட்­டார். அங்கு இரு­தய நெஞ்­சறை சத்­திர சிகிச்சை நிபு­ணர் எம்.எஸ்.முகுந்­தன் பரி­சோ­தனை செய்து சத்­தி­ர­சி­கிச்சை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

“கடந்த வியா­ழக்­கி­ழமை சுமார் 6 மணித்­தி­யா­லங்­கள் சத்­திர சிகிச்சை செய்து அந்­தப் இரும்­புத் துண்டு அகற்­றப்­பட்­டது. குறித்த குண்­டின் பகுதி வல­து­புற நுரை­யீ­ரல் சுவா­சக் குழா­யில் தங்கி நின்­றுள்­ளது. அது சுவா­சப்பை ஊடா­கவே சுவா­சக் குழாய்­குள் சென்­றி­ருக்க வேண்­டும் ஆனால் அது எப்­படி நகர்ந்­தது என்­பது விசித்­தி­ர­மா­கவே உள்­ளது. குண்­டின் பகுதி தங்­கி­யி­ருந்த இடத்­தில் சுவா­சக்­கு­ழாய் விரி­வ­டைந்து குழாய் சேத­ம­டைந்து அதில் சளி தேங்கி அவ­ருக்­குச் சிக்­க­லைக் கொடுத்­துக்­கொண்­டி­ருந்­தது. இரும்­பி­னா­லான அந்­தக் குண்­டின் பகுதி சுமார் 50 கிராம் நிறை­யு­டை­யது” என்று சத்­தி­ர­சி­கிச்சை செய்த மருத்துவ நிபு­ணர் முகுந்­தன் தெரி­வித்­தார்.

மயக்க மருந்து நிபு­ணர் பிறே­ம­கிஸ்ணா தலை­மை­யிலா குழு, தாதி­யர் குழு, மருத்­துவ உத­வி­யா­ளர் குழு ஆகி­ய­வற்­றின் உத­வி­யு­டன் சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close