சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம்!!

0 80

பகுதி-26

கல்வி நிறு­வ­னத்­துக்­கும் அறி­வுக்­கும் சம்­பந்­தம் இல்லை என்­ப­தற்கு, கலை­ஞர் கரு­ணா­நிதி சிறந்த உதா­ர­ணம். பள்­ளிப்­ப­டிப்­பைக்­கூட முழு­மை­யாக நிறைவு செய்­யா­த­வர் கலை­ஞர். அவ­ரு­டன் தி.மு.கவில் பங்­காற்­றிய நெடுஞ்­செ­ழி­யன், அன்­ப­ழ­கன் போன்­ற­வர்­கள் பட்­ட­மேற்­ப­டிப்பை நிறைவு செய்­த­வர்­கள். தமி­ழ­றி­ஞர்­கள் என்று போற்­றப்­பட்­ட­வர்­கள்.

ஆனால், அவர்­கள் எழுத்­துத்­து­றை­யில் கலை­ஞ­ரோடு ஒப்­பி­டும் போது கலை­ஞரை நெருங்க முடி­யாத தூரத்­தில் இருந்­த­னர். கலை­ஞர் தொல்­காப்­பி­யத்­துக்கு உரை எழு­தி­னார், சிலப்­ப­தி­கா­ரத்தை நாட­க­மாக்­கி­னார். கற்­கின்ற ஆர்­வத்தை அறி­ஞர் அண்­ணா­வி­ட­மி­ருந்து தான் பெற்­றி­ருந்­தார். குற­ளோ­வி­யம் என ஒவ்­வொரு குற­ளுக்­கும் ஒவ்­வொரு சிறு­கதை எழுதி விளக்­கி­யி­ருந்­தார் அது அவ­ருக்கு குறள்­மீது இருந்த ஈர்ப்பை விளக்­கும். தமி­ழக அரசு சார்­பில் கட்­டப்­பட்ட ஒரு கட்­டி­டத்­திற்கு ‘குற­ள­கம்’ எனப் பெயர் வைத்­தார்.

அறி­ஞர் அண்ணா நூல­கத்தை
அமைத்­த­வர் மு.க.கரு­ணா­நிதி
கரு­ணா­நிதி தமி­ழ­கத்­திற்­குச் செய்த அளப்­பெ­ரும் பணி­க­ளில் ஒன்று அண்ணா நூற்­றாண்டு நூல­கம். ஆசியா அள­வில் மிகப்­பெ­ரிய நூல­மா­கும். இது கரு­ணா­நி­தி­யின் அற்­பு­த­மான திட்­டங்­க­ளில் ஒன்று என்­கி­றார்­கள். சென்னை கோட்­டூர்­பு­ரத்­தில் அண்ணா நூற்­றாண்டு நூல­கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

அண்ணா நூற்­றாண்டு நூல­கம், முன்­னாள் தமி­ழக முத­ல­மைச்­சர் சி.என்.அண்­ணா­து­ரை­யின் 102ஆவது பிறந்த தினத்தை முன்­னிட்டு, 2010 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் 15ஆம் திக­தி­யன்று அப்­போ­தைய தமி­ழக முத­ல­மைச்­சர் மு.கரு­ணா­நி­தி­யால் திறந்து வைக்­கப்­பட்­டது. இதற்­கான பணி­கள் 2008ஆம் ஆண்­டில் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அறி­ஞர் அண்ணா நூல்­க­ளைக் கற்­ப­தில் பேரார்­வம் கொண்­ட­வர் அதனை மரி­யாதை செய்­யும் பொருட்­டும், அவ­ரது நூற்­றாண்டை நினை­வு­றுத்­தும் வித­மா­க­வும் ‘அண்ணா நூற்­றாண்டு நூல­கம்’ எனப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

ஒன்­பது தளங்­க­ளைக் கொண்ட இந்த நூல­கத்­தில். பல்­வேறு துறை சார்ந்த ஐந்து லட்­சம் புத்­த­கங்­கள் உள்­ளன. நூல­கத்­தின் மற்­றொரு குறிப்­பி­டத்­தக்க சிறப்­பம்­சம் என்­ன­வென்­றால், ‘உலக இணைய மின் நூல­கத்­து­டன்’ (World Digital Library) இணைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நூல­கம் யுனெஸ்­கோ­வின் உலக இணைய மின் நூல­கத்­து­ட­னும் இணைக்­கப்­பட்­டுள்­ளது.

அண்ணா நூற்­றாண்டு நூல­கம் ஆசி­யா­வி­லேயே இரண்­டா­வது பெரிய நூல­கம் என்ற பெரு­மை­யு­டன் தமி­ழ­கத்­திற்கு அழகு சேர்க்­கி­றது. மேலும் இந்த நூல­கம் பன்­னாட்­டுத் தரத்­து­டன் அமைந்­துள்­ள­தால் உல­கின் பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்­தும் ஆர்­வ­லர்­கள் வருகை தரு­கி­றார்­கள். இந்த நூல­கத்­தின் ஒவ்­வொரு தள­மும் தனிச் சிறப்­பு­டன் விளங்­கு­கி­றது.

அண்ணா நூல­கத்­தின்
சிறப்பு அம்­சங்­கள்

தமிழ் நூல்­கள் பிரி­வின் ‘அ’ பிரி­வில், அண்ணா எழு­திய மற்­றும் அண்­ணா­வைப் பற்­றிய நூல்­கள், பெரி­யா­ரின் நூல்­கள் காணப்­ப­டு­கின்­றன. எந்த புத்­த­கம் எந்த மாடி­யில் எந்த அல­கில், எந்த அல­மா­ரி­யில் உள்­ளது? என்­பதை நொடி­யில் கண்­ட­றி­யும் ‘ஒபக்’ (online public access catalogue) என்ற தொழில்­நுட்ப வச­தி­யும் இங்கு உண்டு.
இதன் மூலம் ஒரு நொடி­யில் புத்­த­கத்­தின் இருப்­பி­டத்தை தெரிந்­து­கொள்ள முடி­யும். நாலா­யி­ரம் பருவ இதழ்­க­ளைப் படிக்க உத­வும் டிஜிட்­டல் நூல­க­மும் அண்ணா நூல­கத்­தில் இயங்கி வரு­கி­றது என்­பது குறிப்­பி­ டத்­தக்­கது.

தி.மு.க ஆட்­சி­யின் திட்­ட­மான அண்ணா நூல­கத்தை ஜெய­ல­லிதா முடக்­கு­வ­தற்கு முயற்­சித்­தார். 2011 தமி­ழக முத­ல­மைச்­ச­ரா­கப் பத­வி­யேற்ற ஜெய­ல­லிதா இந்த அரிய நூல­கத்தை மூடி­வி­டு­வ­தற்கு முடி­வெ­டுத்­தார்.

நவம்­பர் 2, 2011 அன்று தமி­ழக முத­ல­மைச்­சர் ஜெய­ல­லிதா வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில் அண்ணா நூற்­றாண்டு நூல­கம் குழந்­தை­கள் நல மருத்­து­வ­ம­னை­யாக மாற்­றப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டது. மேலும் நூல­கம் வேறொரு இடத்­திற்கு மாற்­றப்­ப­டும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டது. அவ்­வாறு அமைக்­கப்­ப­டும் மருத்­து­வ­மனை இந்­தி­யா­வி­லேயே முதல்­மு­றை­ யாக குழந்­தை­க­ளுக்­கான மருத்­து­வ­மனை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இதனை எதிர்த்து சமூ­க­ஆர்­வ­லர்­கள் சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்­த­னர். உயர்­நீ­தி­மன்­றம் அர­சின் முடி­வுக்கு இடைக்­கா­லத் தடை விதித்­தது.

(தொட­ரும்)

You might also like