ஜனாதிபதி மீது அமைச்சர் சம்பிக்க குற்றச்சாட்டு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“அமைச்சரவையைக் கூட்டாமல் அரச இயந்திரத்தை முடக்கியுள்ள ஜனாதிபதி, நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையையும் மீறியுள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை ஜனாதிபதி நினைத்தபடி மாற்ற முடியாது. தேசிய பாதுகாப்பு குறித்து அதில் ஆராயப்பட வேண்டும்“ என்று அவர் தெரிவித்தார்.

You might also like