ஜப்பானின் புதிய மன்னர் பதவியேற்பு!!

ஜப்பானின் 126 ஆவது மன்னராக நருஹிட்டோ இன்று பதவியேற்றார்

125ஆவது மன்னர் அகிஹிட்டோ மகனான நருஹிட்டோ ஜப்பானின் 126 ஆவது மன்னராக இன்று பதவியேற்றார்.

ஜப்பானின் 125 ஆவது மன்னர் அகிஹிட்டோ வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தனது பதவியை விட்டு விலகினார்.

இதையடுத்து அவரது மூத்த மகனான நருஹிட்டோ ஜப்பானின் மன்னராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

டோக்கியோ இம்பீரியல் அரண்மனையில், புதிய மன்னராக சம்பிரதாயப்படி பதவியேற்றார்.

You might also like