side Add

ஜெயிலில் பாடும் நடிகை!!

தமிழில் நடிகை அதிதி ராவ் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் ஒன்றை பாடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த படம் காற்று வெளியிடை. இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அப்போது அந்த படத்தின் புரொமோஷனுக்காக அவர் தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடல் ஒன்றை பாடினார். அந்த சமயத்தில் அவர் பாடிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அதில் தனக்கு சினிமாவில் பாடல் பாடும் ஆசை இருக்கிறது என்றும் அதிதி கூறி இருந்தார்.

இந்நிலையில், ‘ஜெயில்’ படத்தில் அதிதி ஒரு பாடலைப் பாட இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தனது கீச்சகப் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், ‘மிகவும் சந்தோஷமான அறிவிப்பு. சிறந்த திறமையாளர் அதிதி ராவ். அவர், என் இசையில் முதல்முறையாகத் தமிழில் ஒரு பாடல் பாட உள்ளார். வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாக உள்ள ஜெயில் படத்தில் இடம்பெறும் ‘காத்தோடு’ என்ற டூயட் பாடலைப் பாட உள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அதிதி ராவ் 2012-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான லண்டன், பாரிஸ், நியூயார்க் என்ற படத்தில் பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like