தண்டப்பணத்தை செலுத்த மறுத்தவருக்கு 4 ஆயிரம் ரூபா தண்டம்

பொலிஸாரால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்த மறுத்த ஒருவருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் இன்று 4 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைதடி கோவிலாக்கண்டியைச் சேர்ந்த ஒருவருக்கே தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஏனைய வாகனங்களை முதன்மைச் சாலைக்குள் செல்ல விடாமல் தடுக்கும் விதத்தில் வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.

இவருக்கு சம்பவ இடத்திலேயே தண்டம் விதித்து பொலிஸார் பற்றுச்சீட்டினை எழுதினர்.  ஆனால் தண்டம் செலுத்த முடியாதென குறித்த நபர் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

ஏனைய வாகனங்களை முதன்மைச் சாலைக்குள் வரவிடாமல் தடுக்கும் நோக்கில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியமை, பொலிஸாரால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தைச் செலுத்தத் தவறியமை போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிவான் இரு குற்றங்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபா வீதம் 4 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

You might also like