side Add

தன் அமைச்சுப் பத­வியைக் கைவிட   டெனீஸ் 2 நிபந்­த­னை­கள் விதிப்பு

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன் தான் செய்த தவ­று­களை ஏற்­றுக்­கொண்டு மன்­னிப்­புக் கேட்­ப­தற்கு அவ­ரது தன்­மு­னைப்பு (ஈகோ) இட­ம­ளிக்­கா­விட்­டா­லும், ஏனைய இரண்டு நிபந்­த­னை­யும் அவர் செயற்­ப­டுத்­து­வேன் என்று உறுதி வழங்­கி­னால் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கின்­றேன்.

இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் பா.டெனீஸ்­வ­ரன் சபை­யில் நேற்­றுத் தெரி­வித்­தார்.
வடக்கு அமைச்­ச­ரவை தொடர்­பில் நேற்று இடம்­பெற்ற விவா­தத்­தில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

‘‘இது ஈகோ பிரச்­சினை என்­கின்­றீர்­கள். ஏன் முத­ல­மைச்­சர் விட்­டுக்­கொ­டுக்­க­வேண்­டும். டெனீஸ்­வ­ரன் பதவி வில­க­லாம்­தானே? சத்­தி­ய­லிங்­கம் அமைச்­சுப் பத­வி­யைத் துறந்­த­தைப்­போன்று டெனீஸ்­வ­ர­னும் செய்­ய­லாமே?’’’ என்று ஆளும் கட்சி உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் கேள்வி எழுப்­பி­னார்.

அத்­து­டன், மறைந்த தமி­ழக முதல்­வர் கலை­ஞர் கரு­ணா­நி­தி­யின் உட­லைப் புதைப்­பது தொடர்­பான சர்ச்­சை­யில் உயர் நீதி­மன்­றம் இர­வோடு இர­வாக ஆராய்ந்து காலை­யில் தீர்ப்­ப­ளித்­தது. எங்­கள் மாகாண சபை­யின் ஆயுள்­கா­லம் ஒக்­ரோ­பர் 25ஆம் திகதி முடி­வ­தைக் கருத்­தில்­கொண்டு, அமைச்­ச­ரவை விவ­கா­ரம் தொடர்­பில் உயர்­நீ­தி­மன்­றம் விரை­வாக வழக்கை விசா­ரித்து முடிக்­க­வேண்­டும் என்­றும் சிவா­ஜி­லிங்­கம் கோரிக்கை முன்­வைத்­தார்.

இதன் பின்­னர் உரை­யாற்­றிய டெனீஸ்­வ­ரன், வழக்­குத் தொடர்­பில் நடந்த விட­யங்­களை சபைக்­குத் தெளி­வு­ப­டுத்­தி­னார். மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் வழக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­ட­போது, அர­ச­மைப்­புத் தொடர்­பில் பொருள்­கோ­டல் பிரச்­சி­னையா? நடை­மு­றைப்­ப­டுத்­தல் பிரச்­சி­னையா? என்று முத­ல­மைச்­ச­ரின் சட்­டத்­த­ர­ணி­யி­டம் கேட்­கப்­பட்­டது. நடை­மு­றைப்­ப­டுத்­தல் பிரச்­சி­னை­தான் என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

அமைச்­ச­ரவை இருக்­கும்­போதே நிதி­யாண்­டுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி­க­ளைச் செலவு செய்து முடிக்­கா­மல் திருப்பி அனுப்­பி­ய­தா­கச் சொல்­லப்­பட்­டது. அமைச்­ச­ரவை இல்­லாத நிலை­யில், இந்த நிதி­யாண்­டுக்­கு­ரிய வேலை­கள் எப்­படி நடை­பெ­றும்?

அமைச்­ச­ரவை விவ­கா­ரத்தை சுமு­க­மாக முடிக்க மூன்று நிபந்­த­னை­களை முன்­வைக்­கின்­றேன். அதனை முத­ல­மைச்­சர் ஏற்­றுக் கொண்­டால் நான் பதவி வில­கு­கின்­றேன்.

முத­ல­மைச்­சர், என்­னை­யும், சத்­தி­ய­லிங்­கத்­தை­யும் பதவி நீக்­கி­யது உள்­ளிட்ட அவர் செய்த தவ­று­க­ளுக்கு மன்­னிப்­புக் கோர­வேண்­டும். அவர் இத­னைச் செய்­வ­தற்கு தன்­மு­னைப்பு இட­ம­ளிக்­கா­விட்­டால், இந்த நிபந்­த­னையை ஏற்­கத் தேவை­யில்லை. ஆனால் மற்­றைய இரண்டு நிபந்­த­னை­க­ளை­யும் முத­ல­மைச்­சர் ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டும்.

முன்­னாள் போரா­ளி­கள், மாவீ­ரர் குடும்­பங்­க­ளுக்­கான வாழ்­வா­தார உத­வித் திட்­டங்­கள் நான் அமைச்­ச­ராக இருந்த காலத்­தில் தொடங்­கப்­பட்­டி­ருந்­தது. அது தற்­போது நிறுத்­தப்­பட்­டுள்­ளது. அத­னைத் தொடர்ந்து நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும்.

மிக நீண்­ட­கா­லம் ஆரா­யப்­பட்டு உரு­வாக்­கப்­பட்ட தனி­யார் மற்­றும் அரச பேருந்து இணைந்த நேர அட்­ட­வ­ணையை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும். இந்த இரண்டு விட­யங்­க­ளை­யும் முத­ல­மைச்­சர் செய்­தாலே, பத­வியை நான் துறப்­பேன் – என்­றார். (உ-5)

You might also like