தமிழர் போராட்டத்துக்கு கைகொடுத்த ஜோர்ஜ் பெர்னாண்டஸ் மறைந்தார்!!

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்குப் பெருரிதும் உதவிக்கரம் கொடுத்த இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் தனது 88 வயதில் இன்று காலமானர்.

கடந்த 1998 முதல் 2004 ஆம் ஆண்டு வரை வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இவர் பதவி வகித்தவர்.

இது தவிர தொழில் துறை, ரயில்வே போன்ற துறைகளிலும் அமைச்சராக பதவிகளை வகித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழகத்தை தளமாகக் கொண்டு ஆரம்பித்த நாளிலிருந்து ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தன்னைப் போராட்டத்துடன் நெருக்கப்படுத்திக் கொண்டவர்.

இந்திய அமைதிப்படை ஈழத்தில் நாடாத்திய படுகொலைகளை முதன் முதல் வெளி உலகத்துக்குக் கொண்டு வந்த பெருமை இவரைச் சாரும்.

You might also like