தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்!!

வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் நோக்குடன் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று இடம்பெற்றது.

வவுனியா வைத்தியசாலையின் உளநல பிரிவினரால் ஏற்பாடு செய்யபட்ட ஊர்வலம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு முன்பாக ஆரம்பித்து கடைவீதி வழியாக நகரசபை மண்டபத்தை அடைந்திருந்தது.

ஊர்வலத்தில் வைத்தியர்கள், தாதியர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், தாதியகல்லூரி மாணவர்கள், மருத்துவ மாதுக்கள், பாடசாலை மாணவர்கள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள், சிறப்புத் தேவைக்குட்பட்டோர், சமூக ஆர்வவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like