திடீரென தீப்பற்றிய தனியார் பேருந்து!!

இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று அதிகாலை தீப்பற்றியுள்ளது.

அவிஸ்ஸாவலை கிரிந்தி வெல பகுதியில் தீ பரவியுள்ளது.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எவ்வாறாயினும் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like