திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்த மகள் – பெற்றோர் எடுத்த முடிவால் – மகளும் உயிர்மாய்ப்பு!!

ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேந்தவர் துங்கா வெங்ய்யா (45). இவர் மனைவி ரஜானி (39). இவர்களுக்கு கிருஷ்ண வேணி (19) என்ற மகளும், சாய் கோபினாத் என்ற மகனும் உள்ளனர்.

கிருஷ்ணவேணிக்கு அவர் பெற்றோர் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்த நிலையில், தான் வேறு நபரைக் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்யபோவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் குடும்ப கெளரவம் கருதி அதை ஏற்காத பெற்றோர் திருமணத்துக்கு கிருஷ்ணவேணி சம்மதிக்கவில்லை எனில் தாங்கள் தற்கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து மகளுடன் வெங்கய்யாவும், ரஜானியும் தொடருந்தில் பயணம் செய்த நிலையில் நடைமேடையில் இறங்கிய பின்னர் திடீரென தொடருந்து முன்பு வெங்கய்யாவும், ரஜானியும் குதித்துள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணியும் தொடருந்து முன்னால் குதித்த நிலையில் மூவரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து பொலிஸார் மூவரின் சடலத்தையும் கைப்பற்றி மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

வெங்கய்யா குடும்பத்தில் தற்போது உயிருடன் இருக்கும் சாய் கூறுகையில், நான் பெற்றோரை வெளியில் போகவேண்டாம் எனக் கூறினேன், அவர்கள் தவறான முடிவு எடுக்க மாட்டோம் என என்னிடம் கூறினார்கள்.

ஆனால் மனதை மாற்றி கொண்டு இவ்வாறு செய்து விட்டார்கள் எனக் கூறியுள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close