side Add

தீர்வு கிடைக்காவிடின்- அலுவலகத் தொடருந்துச் சேவையும் இடைநிறுத்தப்படும்!!

எமது கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கா விட்டால் தற்போது சேவையில் ஈடுபடும் 8 தொடருந்துச் சேவைகளும் நாளை முதல் நிறுத்தப்படும் என்று தொடருந்து தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலை, மாலை என 8 அலுவலக தொடருந்து சேவைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து கண்டி, சிலாபம், ரம்புக்கனை, காலி, அவிசாவளை மற்றும் மஹவ உள்ளிட்ட பகுதிகளுக்குத் தொடருந்துச் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் எமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்காவிடின் நாளையிலிருந்து அந்த 8 தொடருந்து சேவையும் இடைநிறுத்தப்படும் என்று தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடாங்கொட தெரிவித்துள்ளார்.

You might also like