துணிவில்லாத அரசியல்வாதிகள்- ஞானசாரதேரர் கிண்டல்!!

இலங்கை எமது நாடு என்ற உண்மையையை தைரியமாகக் கூறுவதற்கு அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பு இல்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“நாட்டில் புர்கா, நிகாப் மற்றும் இஸ்லாமிய அறநெறிப்பாடசாலைகளை தடை செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தின் ஆலோசனை தேவையற்றது. அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்கு ஏற்ப நாட்டை தவறான பாதைக்குக் கொண்டு செல்கின்றனர். எனினும் இதனை நாம் நிறைவுக்கு கொண்டு வருவோம்“ என்றும் அவர் குறிப்பிட்டார்.

You might also like