side Add

தென்கொரியரை விடுதலை செய்தது- வடகொரியா!!

சட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை விடுதலை செய்தது வடகொரியா.

தென் கொரியாவை சேர்ந்தவர் சியோவ் (வயது 34). இவர் கடந்த ஜூலை மாதம் 22- ஆம் திகதி சட்ட விரோதமாக எல்லை தாண்டி வட கொரியாவுக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவரை நேற்று வடகொரியா விடுதலை செய்து விட்டது. இது குறித்து தென்கொரியாவின் ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், “வடகொரியா இன்று (நேற்று) காலை 11 மணிக்கு நம் நாட்டைச் சேர்ந்த சியோவ் என்பவரை பான்முன்ஜோமில் (எல்லையோர கிராமம்) வைத்து எங்களிடம் ஒப்படைத்தது. அவர் சட்ட விரோதமாக தங்கள் நாட்டில் நுழைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக வடகொரியா கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இந்த நிலையில் இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்” என்றுள்ளது.

You might also like