side Add

தெரு நாய்களுக்கு கருத்தடை!!

எறாவூர் நகர பிரதேசத்தில் அதிகரித்துள்ள தெருநாய்களின் பெருக்கத்தைக் குறைக்கும் நோக்குடன், தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் விலங்கு விசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு கால்நடை வைத்தியர்களான சி. துஷ்யந்தன், பிரியங்கி ரத்னாயக்க, ஏ.பி.டபிள்யூ. உதயனி உள்ளிட்டவர்கள் இவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை சுமார் 35 க்கு மேற்பட்ட அலைந்து திரியும் தெருநாய்கள் விரட்டிப் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 40 நாய்களுக்கு விலங்கு விசர் நோய்த் தடுப்பு ஊசி ஏற்றப்பட்டுள்ளது என்று ஏறாவூர் நகர சபையின் செயலாளர் ஏ.ஆர். ஷியாஹுல் ஹக் தெரிவித்தார்.

You might also like