தேரர்கள் மீது துப்பாக்கிச் சூடு -தப்பிச் சென்ற வாகனம் கண்டு பிடிப்பு- பொலிஸார் அதிரடி!!

கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

UP – CAG-8531 என்ற இலக்கமுடைய ஹொண்டா வெஸல் வகையைச் சேர்ந்த ஜீப் வண்டி ஒன்றே துப்பாக்கிச் சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட வாகனம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரரும் மற்றைய தேரரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று இரவு 11 மணியளவில் குறித்த வாகனத்தில் வந்த இனந் தெரியாத மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

விகாராதிபதியின் அடிவயிற்றுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளதுடன், அம்பாந்தோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் கொழும்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தங்காலை வலயத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ், கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close