தொடருந்துக் கடவைக்காப்பாளர்கள்- வவுனியாவில் கவனவீர்ப்பு!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தொடருந்துக் கடவைக்காப்பாளர்கள் வவுனியா தொடருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நி“ரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும், பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து தமது கடமையை தொடருந்து திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்“ என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

?சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் கலைந்து சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like