நகர சபைக்கு ஒத்துழைக்காத சந்திதி ஆலய நிர்வாகம்- வல்வட்டித்துறை நகர சபையில் கடும் விமர்சனம்!!

0 856

வல்வெட்டித்துறை நகரசபையின் நான்காவது அமர்வு தவிசாளர் கோ.கருணாணந்தராசா தலைமையில் நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

அமர்வில் வல்வெட்டிதுறை நகரசபைக்குட்பட்ட அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக சந்நிதி கோயில் நிர்வாகம் நகரசபைக்கு ஒத்தழைப்பு வழங்குவதில்லை. ஆலய தனியார் காணிக்குள் இருக்கும் மலசலகூடங்களை கூடங்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தை அண்டியபகுதியில் உள்ள கழிவகற்றல் மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள பெரும்பாலான சேவைகளை நகரசபையாலேயே மேற்கொள்ளப்படுகிறது என்று சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் தொண்டைமானாறு வழியாக வரும் 751 பேருந்து சேவை தொண்டைமானாறு சந்தியுடனே செல்வதாகவும், சந்நிதி கோவில் வழியாக செல்வதற்கு உரிய இடங்களுக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை ஆகவே இதற்கு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமர்வில் தெரிவிக்கப்பட்டது.

இளங்கதிர் விளையாட்டுக் கழகப் பிரச்சினையால் அமர்வு சூடானது. விளையாட்டுக் கழக காணி தொடர்பில் விவாதிக்கப்பட்டது. அதனால் அமர்வில் கருத்து மோதல் ஏற்பட்டது.

You might also like