நயன்தாராவின் புதிய தோற்றம்!!

நடிகை நயன்தாரா. தற்போது ஐரா, விஸ்வாசம், கொலையுதிர் காலம், இயக்குநர் எம் ராஜேஷின் பெயரிடப்படாத படம், சைரா நரசிம்ம ரெட்டி உட்பட இரு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று தனது 34- ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நயன். இதற்காகா சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நயன்தாராவின் லுக்கும், மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் நயன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த வரலாற்றுப் படத்தில் சித்தம்மா என்ற பாத்திரத்தில் நடிக்கிறார் நயன். அதோடு சிரஞ்சீவி, விஜய்சேதுபதி, ஜெகபதிபாபு, சுதீப், தமன்னா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கின் முன்னணி நடிகருமான ராம் சரண் இதனைத் தயாரிக்கிறார்.

You might also like