நல்­லூர் திரு­வி­ழா­வின் பின்  திலீ­ப­னுக்கு நினை­வுத் தூபி

யாழ். மாந­கர மேயர் தெரி­விப்பு

நல்­லூர் ஆல­யச் சூழ­லில் உள்ள தியாகி திலீ­ப­னின் நினை­வி­டத்­தைப் புனி­த­மா­கப் பேணு­வ­தற்­குச் சுற்­றுக் கம்­பி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. நல்­லூர் ஆல­யத் திரு­விழா முடிந்­த­தும் நினை­வுத் தூபி அமைக்­கும் பணி தொடங்­கும். இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் முதல்­வர் இ.ஆனோல்ட் தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது:

கடந்த உள்­ளு­ராட்சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்ட்­ட­மைப்பு சார்­பாக போட்­டி­யிட்ட நாம் வர­லாற்­றுச் சின்­னங்­க­ளைப் பாது­காப்­போம் எனக் கூறி­யி­ருந்­தோம். நாம் சபை நட­வ­டிக்­கையை ஆரம்­பித்­த­தும் எமது முதல் பணி­யாக திலீ­ப­னின் நினைவு தூபி­யைச் சீர­மைப்­பது என்று தீர்­மா­னித்­தோம். அதற்­கான நட­வ­டிக்­கை­களை தற்­போது தொடங்­கி­யுள்­ளோம்.

நல்­லூர் ஆல­யத் திரு­விழா தொடங்­க­வுள்­ளது. அந்­தப் பகு­தி­யில் பெரு­ம­ள­வான மக்­கள் கூடு­வர். நினை­வி­டத்­தின் புனி­தத் தன்­மை­யைப் பேணச் சுற்­று­வேலி அமைத்­துள்­ளோம். தூபி­யைச் சீர­மைப்­ப­தற்கு மாந­கர சபை­யின் நிதி பயன்­ப­டுத்­தப்­ப­டாது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் நினை­வுத் தூபி அமைப்­ப­தற்­காக 2 லட்­சம் ரூபா ஒதுக்­கி­யுள்­ளார். அந்த நிதி­யில் சீர­மைப்­புப் பணி­கள் நடை­பெ­றும்.- என்­றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close