நாளை புதிய பிரதமர் நியமனம்!!

ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சபை கூடுமென சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நாளை (15) கூடும் நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like