நாளை முதல் பேருந்துக் கட்டணம் குறைப்பு!!

0 463

நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

நூற்றுக்கு இரண்டு வீதத்தால் பேருந்துக் கட்டணத்தை குறைக்க உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஆகியோர் அறிவித்துள்ளனர்.

பேருந்துச் சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஆகக் குறைந்த கட்டணம் 12 ரூபாவில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like