நிதி முறைகேடு- நால்வருக்கு அழைப்பாணை விடுத்தது கோட்டை நீதிமன்றம்!!

அரச தலைவர் செயலகத்தின் முன்னாள் பிரதானி, காமினி செனரத் உள்ளிட்ட நால்வரை மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று அழைப்பாணை விடுத்துள்ளார்.

அம்பாந்தோட்டை ரீஜன்சி ஹோட்டல் நிர்மாணப் பணிகளின் போது, 4 மில்லியன் ரூபாயை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே, இவ்வாறு
அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

காமினி செனரத், பியதாஸ குடாபாலகே, நில் பண்டார ஹபுஹின்ன மற்றும் லசந்த பண்டாரஆகியோருக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close