பணத்தைத் தின்ற ஆட்டால்- கொதிப்படைந்த வீட்டின் உரிமையாளர்!!

மத்திய சர்பியாவில் ஆடு ஒன்று லட்சக்கணக்கான  பணத்தை தின்று தீர்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மத்திய சர்பியாவின் அரன்ஜெலோவாக் அருகே ரனிலோவிக் என்ற கிராமம் ஒன்று உள்ளது. இங்கு சிமிக் இனக் குடும்பம் ஒன்று விவசாயம் செய்து வருகிறது. இந்த விவசாய குடும்பத்தினர் புதிதாக 10 நிலம் வாங்க பணத்தை வைத்திருந்தனர்.

நிலம் வாங்க வைத்திருந்த பணத்தை மேசையில் வைத்து விட்டு கதவை மூடாமல் வயலுக்கு சென்று விட்டனர். இந்த சூழலில் அவர்களது நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று, வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அங்கு மேசையில் இருந்த பணத்தைக் கண்டது. கடுமையான பசியில் இருந்த ஆடு, பணக் கட்டுகளை கடித்து தின்று தீர்த்து விட்டது.

வீடு திரும்பியவர்கள் பணத்தை காணாமல் தேடினர். பணத்தின் எஞ்சிய துண்டுகள் கீழே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வெளியில் வந்து சோதித்த போது, ஆட்டு வாயில் பணத் துகள்கள் மிச்சம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த குடும்பம் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் இருந்தனர். இதனிடையே மொத்த பணத்தையும் தின்று தீர்த்த ஆத்திரத்தில் அந்த ஆட்டை அந்த குடும்பத்தினரே கொன்று சமைத்து சாப்பிட்டனர்.

You might also like