பழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு!!

0 388

தமிழீழத்துக்கு ஆதரவாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை உடனடியாக அழிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழீழத்துக்கு ஆதரவாக “தமிழ் ஈழம் சிவக்கிறது” என்ற புத்தகம் வெளியிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, தன்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்பத் தரக் கோரி பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளதால், பழ.நெடுமாறனின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், பழ.நெடுமாறனின் புத்தகங்களை உடனடியாக அழிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

You might also like