side Add

பாதிரியார்களின்- பாலியல் இச்சைகள்!!

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்த பாப்­ப­ர­சர் போப் பிரான்­சிஸ் முதல் தட­வை­யாக ஒரு விட­யத்­தைப் பகி­ரங்­க­மாக ஏற்­றுக்­கொண்­டார். உல­க­ள­வில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­திய விட­யம் அது. கன்­னி­யாஸ்­தி­ரி­கள் மீதான பாதி­ரி­மார்­க­ளின் பாலி­யல் சேஷ்­டை­கள், வதை­கள் உண்­மையே என்­பதை முதல் தட­வை­யா­கப் போப் பிரான்­சிஸ் ஏற்­றுக்­கொண்­டமை கவ­னம்­பெற்­றது.

உல­க­ள­வில் இருந்து வரும் இந்­தப் பிரச்­சினை பல நாடு­க­ளி­லும் இனம் காணப்­பட்­டி­ருக்­கி­றது. 2014ஆம் ஆண்­டி­லி­ருந்து 2016ஆம் ஆண்­டுக்கு இடை­யில் கன்­னி­யாஸ்­திரி ஒரு­வ­ரைப் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­தார் என்ற குற்­றச்­சாட்­டில், இந்­தி­யா­வின் பஞ்­சாப் மாநில ஜலந்­தர் மறை­மா­வட்ட ஆயர் பிரான்கோ கைதா­கி­னார். அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று கன்­னி­யாஸ்­தி­ரி­கள் போராட்­டம் நடத்­தி­னர். இந்­தப் போராட்­டத்­தில் பங்­கு­கொண்ட கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளைத் திருச்­சபை இட­மாற்­றம் செய்­தி­ருந்­தது. நிலமை இவ்­வா­றி­ருக்க, இந்­தியா முழு­வ­தும் பாதி­ரி­யார்­க­ளால் பாலி­யல் தொல்­லைக்கு ஆளா­கும் கன்­னி­யாஸ்­தி­ரி­கள் குறித்­தும், அவர்­க­ளின் நேரடி அனு­ப­வங்­கள் குறித்­தும் செய்தி நிறு­வ­னம் ஒன்று ஆய்­வொன்றை மேற்­கொண்­டது.

அந்த ஆய்வு தரும் அதிர்ச்சி
பாதி­ரி­யார்­கள் அவர்­க­ளின் அந்­த­ரங்க அறைக்­குள் வலுக்­கட்­டா­ய­மாக அழைத்­துச் சென்­ற­தை­யும் பாலி­யல் உற­வுக்கு உட்­ப­டு­மாறு வற்­பு­றுத்­தி­ய­தை­யும் கன்­னி­யாஸ்­தி­ரி­கள் ஆதங்­கத்­து­டன் கூறி­னர். இயேசு பிரா­னின் தூதர்­கள் என்று நம்­பிய பாதி­ரி­யார்­களே தங்­க­ளின் உட­லில் அத்­து­மீ­றிக் கை வைத்­த­தை­யும் இன்­னும் பிற­சம்பவங்களையும் பல்­வேறு தேவா­ல­யங்­க­ளில் பணி­பு­ரி­யும் கன்­னி­யாஸ்­தி­ரி­கள் தயங்­கித் தயங்கி வெளியே கூறி­யுள்­ள­னர். தனது கதையை ஆரம்­பிக்­கும் கன்­னி­யாஸ்­திரி ஒரு­வர், ‘’அவர் குடித்­தி­ருந்­தார்’’ என்று கூறினார்.

சில நிமி­டங்­க­ளி­லேயே தொடர்ச்­சி­யாக நடந்த பாலி­யல் அத்­து­மீ­றல் குறித்­துக் கூறி­யுள்­ளார் பிறி­தொரு கன்­னி­யாஸ்­திரி. கத்­தோ­லிக்­கத் தலைமை, தங்­க­ளைக் காப்­ப­தில் அதிக சிரத்தை எடுத்­துக் கொள்­வ­தில்லை என்­றும் வேதனை தெரி­வித்­தார். ஆசியா, ஐரோப்பா, தென் அமெ­ ரிக்கா மற்­றும் ஆபி­ரிக்கா உள்­ளிட்ட பகு­தி­க­ளில் கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளைப் பாலி­யல் வதைக்கு உள்­ளாக்­கிய பாதி­ரி­யார்­கள் மற்­றும் பேரா­யர்­கள் குறித்து வத்­திக்­கான் நிர்­வா­கத்­துக்­குத் தெரி­யும் என்­றும் அதை நிறுத்­து­வ­தற்­குக் குறைந்த அள­வி­லான முயற்­சி­க­ளையே வத்­திக்­கான் எடுத்­தது என­வும் கடந்த ஆண்­டின் அறிக்கை ஒன்று கூறு­கி­றது. சில கன்­னி­யாஸ்­தி­ரி­கள், ‘‘பாலி­யல் முறைகேடு எல்லா இடத்­தி­லும் வழக்­க­மான ஒன்­று­தான்’’ என்று நினைக்­கின்­ற­னர். சிலர், ‘’அரி­தான ஒன்று’’ என்­கின்­ற­னர். எவ­ரும் இது­கு­றித்து வெளிப்­ப­டை­யா­கப் பேசத் தயா­ராக இருப்­ப­தில்லை. பெரும்­பா­லா­னோர் தங்­க­ளின் அடை­யா­ளம் மறைக்­கப்­பட வேண்­டும் என்ற விதி­யின் பேரில் தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­யைப் பேசி­யுள்­ள­னர்.

போராட்­ட­மும் அதன் விளை­வு­க­ளும்
கடந்த ஆண்­டில், கேரள மாநி­லத்­தில் கன்­னி­யாஸ்­தி­ரி­யைப் பாலி­யல் வன்புணர்வு செய்­த­தா­கக் கூறப்­பட்ட குற்­றச்­சாட்­டில் பேரா­யர் பிராங்கோ மூலக்­கல் கைது செய்­யப்­பட்­டார். ஆனால் அதற்கு முன்­பாக அந்­தக் கன்­னி­யாஸ்­திரி எதிர்­கொண்ட பிரச்­சி­னை­கள் ஏரா­ளம். 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை கோட்­ட­யம் அருகே குரு­வி­ளங்­காடு பகு­தி­யில் உள்ள தேவா­ல­யத்­தில் பணி­யாற்­றி­ய­வர் பாதி­ரி­யார் பிராங்கோ மூலக்­கல். இவர், தான் பணி­யாற்­றிய காலத்­தில் கன்­னி­யாஸ்­திரி ஒரு­வரை மிரட்டி 13 முறை வன்­பு­ணர்­வில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு ­கி­றது.

இது தொடர்­பா­கப் பாதிக்­கப்­பட்ட கன்­னி­யாஸ்­திரி அப்­போது தேவா­ லய நிர்­வா­கி­ க­ளி­டம் முறைப்­பாடு அளித்­தும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. இதை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட கன்­னி­யாஸ்­திரி குரு­வி­ளங்­காடு பொலி­ஸில் முறைப்­பா­ட­ ளித்­துள்­ளார். குற்­றச்­சாட்­டுக்கு ஆளான பாதி­ரி­யார் பிராங்கோ மூலக்­கல், பஞ்­சாப் மாநி­லம் ஜலந்­த­ரில் பேரா­ய­ராக இருந்து வரு­கி­றார். ஆனால், கன்­னி­யாஸ்­திரி கூறும் குற்­றச்­சாட்டு ஆதா­ர­மற்­றது, பொய்­யா­னது என்று பிராங்கோ மறுத்து வந்­தார். முறைப்­பாடு அளித்து 70 நாள்­கள் ஆகி­யும் பேரா­யர் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்று குற்­றம் சாட்­டிய கன்­னி­யாஸ்­தி­ரி­கள் 5 பேர் 14 நாள்­கள் போராட்­டம் நடத்­தி­னர். உல­கின் கவ­னத்­துக்கு இந்த நிகழ்வு வந்­த­தும் பாதி­ரி­யார் கைதா­னார்.

மற்­றொரு கன்­னி­யாஸ்­திரி மனம் திறக்­கி­றார்
டெல்­லி­யின் வறு­மை­யான பகு­தி­க­ளில் பணி­யாற்றி வரும் கன்­னி­யாஸ்­திரி ஒரு­வ­ரி­டம் பேசி­ய­போது, ‘‘15 ஆண்­டு­க­ளுக்கு முன்­னால், ஒரு தேவா­ல­யத்­தில் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்­தேன். அந்­தப் பாதி­ரி­யா­ருக்கு என் மேல் ஈர்ப்பு இருந்­த­து­போல உணர்ந்­தேன். ஒரு நாள் இரவு நிகழ்­வொன்­றுக்­குச் சென்ற பாதி­ரி­யார் இரவு தாம­த­மாக வந்­தார். 9.30 மணிக்கு மேல் இருக்­கும். என்­னு­டைய அறை­யைத் தட்­டி­னார். ‘’உன்­னைப் பார்க்க வேண்­டும். உன்­னு­டைய ஆன்­மிக வாழ்க்கை குறித்­துப் பேச வேண்­டும்’’ என்­றார். நான் கத­வைத் திறக்­க­வில்லை. வலுக்­கட்­டா­ய­மா­கத் தள்­ளிக் கத­வைத் திறந்­தார். என்­னால் போதை­யின் வாச­னையை உணர முடிந்­தது. ‘‘நீங்­கள் நிதா­னத்­தில் இல்லை. உங்­க­ளு­டன் பேசத் தயா­ராக இல்லை’’ என்­றேன். முத்­தம் கொடுக்க முயன்­றார். எங்­கெல்­லாம் முடி­யுமோ அங்­கெல்­லாம் தொட்­டார். அவரை வேக­மா­கத் தள்­ளி­விட்­டு­விட்­டுக் கத­வைப் பூட்­டி­னேன். அது பாலி­யல் பலாத்­கா­ரம் இல்லை என்­றா­லும் அது ஓர் அச்­சு­றுத்­தும் நிகழ்­வாக இருந்­தது. இது­கு­றித்து என்­னு­டைய மூத்த கன்­னி­யாஸ்­தி­ரி­யி­டம் சொன்­னேன். அவர், பாதி­ரி­யா­ரு­டன் மீண்­டும் சந்­திப்­பு­கள் நிக­ழாத வண்­ணம் பார்த்­துக்­கொண்­டார். நடந்­தவை குறித்து, தேவா­லய அதி­கா­ரி­க­ளுக்­குப் பெய­ரி­டப்­ப­டாத கடி­தங்­களை எழு­தி­னேன். ஆனால், நட­வ­டிக்கை எது­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை’’ என்­றார்.

புனி­தத்­துக்­கும் வேட்­டை­யா­ட­லுக்­கும் இடை­யில்…
கத்­தோ­லிக்க வர­லாறு முழு­வ­தும் பெண்­கள் தங்­க­ளு­டைய புனி­தத் தன்­மை­யைக் காத்­துக் கொள்­வ­தற்­காக, தியா­கி­க­ளாக மாறி உயிர் துறந்த சம்­ப­வங்­கள் நிறைய நிகழ்ந்­தி­ ருக்­கின்­றன. புனி­தர் அகதா, திரு­ம­ணம் செய்­து­கொள்ள மறுத்­த­தால், மார்­ப­கங்­க­ளைக் கிழித்­துக் கொல்­லப்­பட்­டார். தனது புனி­தத்­தன்­மை­யைக் காத்­த­தற்­கா­கப் புனி­தர் லூசி, உயி­ரு­டன் எரித்­துக் கொல்­லப்­பட்­டார். வன்­பு­ணர்வு செய்ய முயன்ற ஒரு­வ­ரால் புனி­தர் மரியா கொரேட்டி, 11 வய­தில் கொல்­லப்­பட்­டார். ‘’இது புனி­தத்­துக்­கும் வேட்­டை­யா­ட­லுக்­கும் இடை­யி­லான போராட்­டம்’’ என்­கி­றார் டெல்­லி­யைச் சேர்ந்த தத்­து­வ­வி­யல் அறி­ஞர் ஷாலினி மூலக்­கல்.

ஏன் கன்­னி­யாஸ்­தி­ரி­கள் முறை­யி­டு­வ­தில்லை?
பாதி­ரி­யா­ருக்கு எதி­ராக முறை­யி­டு­வது என்­றால் தேவா­லய நிர்­வா­கத்­தில் அவர்களுக்கு மேலாக இருப்­ப­வர் மீது குற்­றம் சுமத்­து­வது. இது ஏரா­ள­மான வதந்­தி­க­ளுக்­கும் தேவா­லய அர­சி­ய­லுக்­கும் வழி­வ­குக்­கும். இது அவ­ர­வர் நற்­பெ­ய­ருக்­குக் களங்­கம் விளை­விக்­க­லாம். அது­மட்­டு­மல்­லா­மல் மத ரீதி­யான அர­சி­யல், பெண்­கள் என்­றாலே குறைச்­ச­லாக மதிப்­பி­டும் நம்­பிக்கை உள்­ளிட்­டவை கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளின் அமை­திக்கு ஊக்­கம் அளித்­து­வி­டு­கின்­றன. இன்­னும் சில கன்­னி­யாஸ்­தி­ரி­களோ, தங்­க­ளது முறைப்­பாடு தாங்­கள் சார்ந்­துள்ள தேவா­ல­யத்­தின் பெய­ரைக் குலைக்­கும் என்­றும் ஏனைய மத அமைப்­பு­க­ளின் விமர்­ச­னங்­களை எதிர்­கொள்ள வேண்­டும் என­வும் அஞ்­சு­கின்­ற­னர்.

குடி­போ­தை­யில் இருந்த பாதி­ரி­யாரை எதிர்­கொண்ட கன்­னி­யாஸ்­திரி, ‘’நான் உண்­மை­யைச் சொன்­னால், தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வேனோ என்ற பயம்­தான் வெளியே சொல்­லா­த­தற்கு முக்­கிய கார­ணம். பாதி­ரி­யார்­க­ளுக்கு எதி­ராக முறை­ யி­டும்­போது, தங்­க­ளின் சொந்த மதத்­தி­ன­ரையே, தங்­க­ளின் மத உய­ர­தி­கா­ரி­க­ளையே எதிர்க்க வேண்டி வரு­கி­றது’’ என்­கி­றார். கன்­னி­யாஸ்­திரி ஷாலினி மூலக்­கல் மேலும் கூறும்­போது, ‘’நாங்­கள் கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளா­கவே இருந்­தா­லும் கூட, அமை­தி­யாக இருக்­கவே முயற்­சிக்­கி ­றோம். பாலி­யல் அனு­ப­வங்­களை எதிர்­கொள்­ளும் பெண், அதை மறைத்து எல்­லாம் சரி­யாக இருக்­கி­றது போன்ற தோற்­றத்தை ஏற்­ப­டுத்­தவே முயல்­கி­றாள்’’ என்­றார்.

You might also like