பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்- இருவருக்குப் பிணை!!

0 22

பதுளை பிரதேச சபையின் தமிழ் உறுப்பினர் பாலகிருஸ்ணன் முரளிதரன் தாக்கப்பட்டமை தொடர்பாக பதுளை பொலிஸார் இருவரைக் கைது செய்தனர்.

பதுளை நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களை தலா ஒரு இலட்ச ரூபா சரீரப் பிணையில் விடுவித்தது நீதிமன்று.

பதுளையின் குப்பை கூளங்கள் மற்றும் கழிவுகள் ஆகியவற்றை பதுளை பிரதேச சபை எல்லைக்குள் குவிப்பது குறித்த விடயத்தில் குறிப்பிட்ட பிரதேசசபை உறுப்பினருக்கும், சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை ஆரம்ப பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

You might also like