பிரபல உணவகத்தில் தீ!!

மட்டக்களப்பு மத்திய வீதியில் மரியாள் பேராலயத்துக்கு முன்பாகவுள்ள பிரபல உணவகம் ஒன்றில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like