பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு – மீனின் தோல்கள் மூலம் பிறப்புறுப்பு !!

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் ஜூசிலன் மாரின்ஹோ (23) என்ற இளம்பெண் பிறப்பிலேயே பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்தவர். மேலும் கருப்பை வாய் மற்றும் கருப்பையும் இல்லாத காரணத்தால் இவரால் குழந்தை பெற்றுக்கொள்வதும் இயலாது.

இவர் பிறக்கும்போதே சிண்ட்ரோம் குறைபாட்டால் (Mayer-Rokitansky-Küster-Hauser)பாதிக்கப்பட்டிருந்தார். இந்த குறைபாடு அதிகமாக பெண்களுக்குத் தான் ஏற்படும். இது பெண்களின் இனப்பெருக்க அமைப்பை பாதிக்கிறது. இதனால், யோனி மற்றும் கருப்பை வளர்ச்சி இல்லாமல் அப்படியே உடலினுள் உள்வாங்கி காணப்படும்.

15 வயதில் இருந்த பிரச்சினையை எதிர்கொண்ட ஜூசிலன் பின்னர் அறுவை சிகிச்சை செய்து உள்ளார். மீனின் தோலமைப்பை பயன்படுத்தி பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக தலைபியா என்ற மீனின் தோல்கள் பயன்படுத்தப்பட்டன.

எதற்காக இந்த மீனின் தோல்கள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கான காரணத்தை கூறிய மருத்துவர்கள், இந்த வகை மீனில் அதிகமாக பாக்டீரிய தொற்றுக்கள் இருக்காது. இதனை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு எவ்வித வலியும் இருக்காது. இந்த தோலில் இருந்து பிறப்புறுப்பு வடிவம் வெட்டியடுக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. சுமார், 3 வாரங்கள் இந்த அறுவை சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போது அப்பெண் நலமாக இருக்கிறார் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து அப்பெண் கூறியதாவது:-
நான் இந்த உலகில் பிறந்திருக்கவே கூடாது என கவலையில் இருந்தேன். இதுபோன்ற ஒரு குறைபாட்டால் என்னால் குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட இயலாதே என வெட்கி தலைகுனிந்தேன். எனது உலகமே முடிந்துவிட்டது என நினைத்தேன். இந்நிலையில் எனது பெற்றோரிடன் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்தேன். இந்த அறுவை சிகிச்சையால் நான் நலமாக இருக்கிறேன். இனி எனது காதலனோடு வாழ்க்கையை சந்தோஷமாகக் கழிப்பேன். எனது பெற்றோரும் என்னை நினைத்து மகிழ்ச்சி கொண்டுள்ளார்கள் எனக் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close