side Add

புதிய அரசமைப்பும் -புதிய குழப்பங்களும்!!

புதிய அர­ச­மைப்பு வருமா? வராதா? அதன் உத்­தேச வரை­வா­வது நாடா­ளு­மன்­றத்துக்கு வருமா? வராதா? இன்­றைய அர­சி­யல் கள நில­வ­ரத்­தில் . முக்­கி­ய­மான கேள்வி இது. ஆனால் பதிலோ, “வரும்…. ஆனா வராது!” என்­ப­தா­கத்­தான் இருக்­கி­றது.

கடை­சி­யில் புதிய அர­ச­மைப்பு முயற்­சியை விட்ட இடத்­தி­லி­ருந்து முன்­ன­கர்த்­து­வ­தற்கு மேற்­கொள்­ளப்­ப­டும் நட­வ­டிக்கை சட்­டத்துக்கு முர­ணா­னது என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் கூறி­விட்­டது. ஆக, புதிய அர­ச­மைப்பை ஒப்­பேற்­றும் முயற்­சிக்கு எதிர்ப்பு வலுத்­துக்­கொண்டே செல்­கின்­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை மீண்­டும் ஆட்­சிக் கதி­ரை­யில் அமர்த்­து­வ­தற்­கா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யு­டன் கண்ட இணக்­கம் பெப்­ர­வரி 4ஆம் திக­திக்கு முன்­ன­தாக புதிய அர­ச­மைப்பு தொடர்­பான உத்­தேச வரைவு நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­ப­டும் என்­ப­தா­கும்.
அதன்­படி, வல்­லு­நர்­கள் குழு­வால் தயா­ரிக்­கப்­பட்ட புதிய அர­ச­மைப்பு வரைவு நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­ப­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். இப்­போது அந்த வரைவு சட்­டத்துக்குப் புறம்­பா­னது என்று போர்க்­கொடி தூக்­கு­கி­றது சுதந்­தி­ரக் கட்சி.

2015 ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் நாடா­ளு­மன்­றம் அர­ச­மைப்­புச் சபை­யாக மாற்­றப்­பட்­டது. அதில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தின்­படி அர­ச­மைப்­பின் உள் விட­யங்­களை ஆராய்­வ­தற்­காக 6 உப குழுக்­கள் நிய­மிக்­கப்­பட்­டன. அதி முக்­கிய விட­யங்­க­ளைக் கையாள்­வ­தற்­கா­க­வும் உத்­தேச வரை­வுக்­கான வழ­ிகாட்­டல்­களை வழங்­கு­வ­தற்­கா­க­வும் வழி­காட்­டல் குழு ஒன்­றும் நிய­மிக்­கப்­பட்­டது. இந்­தக் குழு­வில் நாடா­ளு­மன்­றத்­தில் அங்­கத்­து­வம் வகித்த அனைத்­துத் தரப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­க­ளுக்­கும் இட­ம­ளிக்­கப்­பட்­டது.

மகிந்த ராஜ­பக்ச அணி­யி­னர் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஊடா­கப் போட்­டி­யிட்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கி­ய­போ­தும் வழி­காட்­டல் குழு­வில் அவர்­க­ளை­யும் ஒரு தரப்­பா­கக் கருதி இடம் வழங்­கப்­பட்­டது. புதிய அர­ச­மைப்­பின் முக்­கிய விட­யங்­கள் தொடர்­பில் ஆராய்ந்து இந்த வழி­காட்­டல் குழு வழங்­கிய ஆலோ­ச­னை­க­ளுக்கு அமைய நிபு­ணர் குழு புதிய அர­ச­மைப்பு வரை­வுக்­கான உத்­தேச நகல் ஒன்­றைத் தயா­ரித்­தது. அந்த நகல் வழி­காட்­டல் குழு­வில் ஆரா­யப்­பட்­டது.

இந்த நிலை­யி­லேயே அதனை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைப்­பது என்­கிற தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டது. அதற்­கி­டை­யில் தலைமை அமைச்­சர் பதவி நீக்­கம், புதி­ய­வர் நிய­ம­னம் என்று அர­சி­யல் குழப்­பங்­கள் பல­வும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­ட­தால் அது நின்று போனது.

விட்ட இடத்­தி­லி­ருந்து புதிய அர­ச­மைப்பு முயற்­சியை முன்­ன­கர்த்­தும் வகை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எடுத்த ஒரு நகர்­வின் ஊடாக மாசி மாதம் 4ஆம் திக­திக்கு முன்­னர் உத்­தேச வரைவு நாடா­ளு­மன்­றத்துக்குக் கொண்­டு­வ­ரப்­ப­ட­லாம் என்­கிற நிலை இருக்­கி­றது. எனி­னும் முன்­வைக்­கப்­பட உள்ள வரைவு நிபு­ணர் குழு­வின் வரைவே தவிர அது வழி­காட்­டல் குழு­வால் ஆரா­யப்­பட்டு அனு­ம­திக்­கப்­பட்ட வரைவு அல்ல என்­கி­றது சுதந்­தி­ரக் கட்சி. அத­னா­லேயே அது சட்­டத்துக்கு மாறா­னது, புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக ஏற்­றுக்­கொள்­ள­பட்ட படி­மு­றை­க­ளைத் தாண்­டி­யது என்று கூறு­கின்­றது.

வழி­காட்­டல் குழு வழங்­கிய அறி­வு­ரை­கள், வழிப்­ப­டுத்­தல்­க­ளின் படியே நிபு­ணர் குழு புதிய அர­ச­மைப்­புக்­கான உத்­தேச வரை­வைத் தயா­ரித்­தி­ருக்­கும் நிலை­யில் அது வழி­காட்­டல் குழு­வைத் தாண்­டிய நட­வ­டிக்கை என்று விமர்­சிப்­பது ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தல்ல. இதன் நோக்­கம் உத்­தேச வரைவு குறைந்­த­பட்­சம் நாடா­ளு­மன்­றத்­தி­லா­வது முன்­வைக்­கப்­ப­டு­ வ­தைத் தடுத்து நிறுத்­து­வ­து­தான்.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தைக் குழப்­பு­வ­தை­யும் நோக்­கா­கக் கொண்­டு­தான் அண்­மைய அர­சி­யல் குழப்­பம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர்­கள் குற்­றஞ்­சாட்­டி­யி­ருப்­ப­தை­யும் மறந்­து­விட முடி­யாது. இப்­போது சுதந்­தி­ரக் கட்சி இந்த விட­யத்­தைக் கையில் எடுத்­தி­ருப்­பது மீண்­டும் அத­னைக் குழப்­பு­வ­தற்­குத்­தான் என்­ப­தும் தெளி­வா­னது. அத­னால்­தான் புதிய அர­ச­மைப்பு தொடர்­பான வரைவு நாடா­ளு­மன்­றத்துக்கு “வரும்… ஆனா வராது!” என்று சொல்ல வேண்­டி­யி­ருக்­கி­றது.

You might also like