புதிய தேசிய கூட்டணி அமைப்பு- ஒப்பந்தங்களும் கைச்சாத்து!!

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி கொட்டகலையில் இன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றின் பொது செயலாளர்கள் இணைந்து உடனபடிக்கையில் கைச்சாத்திட்டனர்.

You might also like