புதுவருட சேமிப்பு ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகம்!!

வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நெருக்­க­மான, நட்பு ரீதி­யான வங்­கி­யா­கச் செயற்­பட்­டு­வ­ரும் ‘எச்.என்.பி, பீ.எல்.சீ’, பொது மற்­றும் சிறு­வர் சேமிப்­புக் கணக்­கு­க­ளைப் பேணும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சிறப்பு புது­வ­ருட சேமிப்பு ஊக்­கு­விப்­புத் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இக்­கா­லத்­தில் வாடிக்­கை­யா­ளர்­கள் மத்­தி­யில் சேமிப்­புப் பழக்­கத்தை ஊக்­கு­விக்­க­வும், அவர்­க­ளுக்கு பரி­சில்­களை வழங்­க­வும் இந்­தத்­திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.புதிய ஊக்­கு­விப்­புத்­திட்­டத்­தின் ஊடாக, ஏப்­ரல் மாத காலப்­ப­கு­தி­யில் 25 ஆயி­ரம் ரூபா தொடக்­கம் 3 மில்­லி­யன் ரூபா வரை தங்­கள் பொது சேமிப்­புக் கணக்­கில் வைப்­பி­லி­டும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு விசேட பரி­சு­களை ‘எச்.என்.பி’ வழங்­க­வுள்­ளது.

இந்­தத் தனித்­து­வ­மான விசேட ஊக்­கு­விப்­புத்­திட்­டம் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த வங்­கி­யின் வைப்­பு­க­ளுக்­கான சிரேஷ்ட முகா­மை­யா­ளர் விரங்க கமகே,

“இந்த ஆண்­டுக்­கு­ரிய ஊக்­கு­விப்­புத் திட்­டத்­தின் நோக்­கம், சேமிப்பை ஊக்­கு­விப்­ப­தோடு, முழுக் குடும்­பத்­தி­ன­ருக்­கும் முழு­மை­யான செயற்­றி­ற­னோடு உற்­சா­கத்தை வழங்கி இந்த திட்­டத்தை முன்­னெ­டுப்ப­ தாகும். எனவே இந்­தப் புத்­தாண்­டுக் காலத்­தில் எமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு மிகச்­சி­றந்­ததை நாம் வழங்­கி­யி­ருப்­ப­தாக நாம் நம்­பு­கி­றோம். 2016 ஆம் ஆண்­டில் இலங்கை ச் சந்­தை­யில் ‘எச்.என்.பி’ முதன்­மு­த­லாக அறி­மு­கப்­ப­டுத்­திய, மிக­வும் பிர­ப­ல­மான பரிசு வவுச்­சர் திட்­டத்­தை­யும் இவ்­வாண்டு மீள­வும் அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றோம். அதன் மூல­மாக மதிப்­பு­மிக்க எமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அவர்­க­ளது சேமிப்­பின் மதிப்­புக்­கேற்ற வகை­யில் மின்­சார, இலத்­தி­ர­னி­யல், வீட்டு உப­க­ர­ணங்­கள் மற்­றும் பீங்­கான் பரி­சுப் பொருள்­களை நிக­ரற்ற வகை­யில் நாம் வழங்­க­வி­ருக்­கி­றோம். இத்­த­கைய திட்­டங்­களே வங்­கியை சந்­தை­யில் முன்­ன­ணி­யில் வைத்­தி­ருப்­ப­தற்­கு­ரிய கார­ணங்­க­ளாக அமைந்­துள்­ளன.” எனத் தெரி­வித்­தார்.

கடந்த ஆண்டு மேற்­படி திட்­டத்­தின் ஊடாக, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நாம் வழங்­கி­யி­ருந்த பரி­சுப் பொருள்­க­ளுக்கு மேல­தி­க­மாக,இவ்­வாண்டு பல புதிய பரி­சுப் பொதி­கள் விரி­வான முறை­யில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதி­தி­றன் பேசி­கள், ‘எச்.டி’ தொலைக்­காட்­சி­கள்,மடிக் கணி­னி­கள், சமை­ய­லறை உப­க­ர­ணங்­கள், வீட்­டுப்­பொ­ருள்­கள், சலவை இயந்­தி­ரங்­கள், குளிர்­சாத­ னப்­பெட்­டி­கள், நீர் பம்­பி­கள், காஸ் குக்­கர்­கள் மற்­றும் வங்­கி­யின் 130ஆவது ஆண்டு நிறைவை நினைவு­ கூரும் வகை­யில், ‘றோயல் பேன்­வூட்’ இன் விசே­ட­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட 22 கரட் தங்­கம் பொறிக்­கப்­பட்ட தேநீர்க் கோப்பை, மக் செட்­டு­கள் உள்­ளிட்ட பல பரி­சு­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

மேலும், ‘எச்.என்.பி’ இன் பொதுச் சேமிப்பு ஊக்­கு­விப்­புத்­திட்­டத்­துக்கு மேல­தி­க­மாக, சிறு­வர் சேமிப்­புக் கணக்கை வைத்­தி­ருக்­கும் அனைத்து வயது ‘சிங்­கித்தி’ சேமிப்பு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் புது­வ­ருட ஊக்­கு­விப்­புத்­திட்­டத்­தின் ஊடாக பரி­சு­கள் வழங்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன. குறிப்­பாக 10 ஆயி­ரம் ரூபா வைப்­பி­லி­டும் ‘சிங்­கித்தி’ வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ‘நெரன்சி விளை­யாட்­டுத் தொகுதி’, 25 ஆயி­ரம் ரூபாவை வைப்­பி­லி­டும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ‘ஹவர்­போல் விளை­யாட்­டுத் தொகுதி’ மற்­றும் 50 ஆயி­ரம் ரூபா அல்­லது அதற்கு மேற்­பட்ட வைப்­புத் தொகைக்கு ‘பல்­லாங்­குழி மர­வி­ளை­யாட்­டுத் தொகுதி’ என்­பன பரி­சாக வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

சிங்­கித்தி வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வரு­டம் முழு­தும் வழங்­கப்­ப­டும் பரி­சு­க­ளுக்கு மேல­தி­க­மாக, சிறு­வர்­கள் மத்­தி­யில் சேமிப்­புப் பழக்­கத்தை ஊக்­கு­விக்­கும் வித­மாக இப்­ப­ரி­சு­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. மேலும் ‘சிங்­கித்தி’ வைப்­பா­ளர்­கள் தற்­போ­துள்ள ‘சிங்­கித்தி ஜம்போ லேண்ட்’ பரி­சுத் திட்­டத்­தின் ஊடா­க­வும் தமக்­கான பரி­சு­க­ளைப் பெறத் தகு­தி­யு­டை­ய­வர்­க­ளா­கின்­ற­னர்.

இலங்­கை­யின் மிகப்­பெ­ரிய தனி­யார்­துறை வர்த்­தக வங்­கி­யான ‘எச்.என்.பி பீ.எல்.சீ, நாட­ளா­விய ரீதி­யில் 251 வாடிக்­கை­யா­ளர் நிலை­யங்­க­ளைக் கொண்­டுள்­ளது. சில்­லறை, சிறு மற்­றும் நடுத்­த­ரத் தொழில், கூட்­டு­றவு மற்­றும் டிஜிட்­டல் வங்கி உட்­பட வங்­கித்­து­றை­யில் நவீன தொழில்­நுட்­பங்­க­ளின் அடிப்­ப­டை­யில் வடி­வ­மைக்­கப்­பட்ட இலங்­கை­யின் மிக­வும் புத்­தாக்­க­மான இணை­யத்­தள மற்­றும் மொபைல் வங்­கிச் சேவை­க­ளு­டன் சந்­தை­யில் முன்­னணி இடத்தை தக்­க­வைத்­துள்­ளது. 2017 ஆம் ஆண்டு இலங்­கை­யின் மிகச்­சி­றந்த வாடிக்­கை­யா­ளர் வங்­கி­யாக 10 ஆவது தட­வை­யா­க­வும் தெரிவு செய்­யப்­பட்­ட­தோடு,ஆசிய பசு­பிக் பிராந்­தி­ யத்­தில் மிகச்­சி­றந்த நுண்­நி­தித் தயா­ரிப்­பா­க­வும் அங்­கீ­கா­ரம் பெற்­றுள்­ளமை குறிப்பி­டத்­தக்­கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close