பெற்றோல் நிரப்பும் போது- திடீரென தீப்பற்றி எரிந்த இளைஞன்!!

0 12

மோட்டார் சைக்கிளுக்கு பொற்றோல் நிரப்புப் போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு பெற்றோல் நிரப்ப வந்த இளைஞன் மீது பரவி எரிந்தது.

இந்தச் சம்பவம் இந்தியா நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்துள்ளது.

துரிதமாக செயல்பட்ட ஊழியர்கள் தீ அணைப்பானைக் கொண்டு, இளைஞனின் உடையின் மீது பரவிய தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், 40 சதவீத தீக்காயங்களுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இளைஞன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பாளையங்கோட்டை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் இக்காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like