பொன்னியின் செல்வன் படத்தில் பல பிரபலங்கள்!!

செக்க சிவந்த வானம் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்குவதில் தீவிரமாகியுள்ளார்.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, கீர்த்தி சுரேஷ், அமலா பால், மோகன் பாபு என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

அதோடு நடிகர் இளங்கோ குமரவேல், மணிரத்னத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்துக்கு திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தில் மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வரும் ஜெயராமுடன், படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.

You might also like