பொன்.சிவகுமாரனுடன்- அனுபவப் பகிர்வு!!

ஜன­நா­ய­கப் பாரம்­ப­ரிய வழி­யில் எமது உரி­மை­களை வென்­றெ­டுக்க முடி­யாது ஆயு­தப் போராட்­டத்­தின் மூலமே அதனை அடைய முடி­யு­மென்று 1970களி­லேயே ஆயு­தப் போராட்­டத்­திற்­கான வித்­தினை இட்­ட­வர் தியாகி சிவ­கு­மா­ரன்.

அது­மட்­டு­மல்ல ஏற்­க­னவே பொலி­சா­ரி­னால் கைது செய்­யப்­பட்டு அவர்­க­ளின் கைக­ளில் பட்ட அனு­ப­வத்­தின் விளை­வாக பிறி­தொரு சந்­தர்ப்­பத்­தில் அவ்­வாறு நிக­ழு­மே­யா­னால் தன்­னு­யிரை தானே மாய்த்­துக்­கொள்­வேன் என்று பல முறை எங்­க­ளி­டம் கூறி­ய­தனை நிரூ­பித்­தும் காட்­டி­யி­ருக்­கின்­றார்.

தீண்­டாமை மத மாற்­றச் செயற்­பா­டு­கள் போன்­ற­வற்றை சிவ­கு­மா­ரன் கண்­டித்­தது மட்­டு­மல்­லா­மல் அவற்­றிற்­கெ­தி­ராக நாம் தீவி­ர­மாக செயற்­பட வேண்­டும் என்­றும் எம்­மு­டன் வாதா­டு­வார். அத்­து­டன் ஜன­நா­யக வழி­யி­லான போராட்­டங்­க­ளி­னால் எமது இனத்தை சிங்­கள அரசு தங்­க­ளி­னு­டைய பொலிஸ் மற்­றும் இரா­ணு­வப் பலத்­தி­னால் அடக்­கு­கின்­றது. இதற்­கெ­தி­ராக நாமும் வன்­முறை செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­ட­வேண்­டு­மென்ற கருத்து அவ­ரது உரை­யா­டல்­க­ளின்; போது அவ­தா­னிக்­கப்­ப­டக் கூடி­ய­தாக இருக்­கும்.

உரும்­பி­ரா­யில் பொன்­னுத்­துரை அன்­ன­லட்­சுமி தம்­ப­தி­யி­ன­ரிற்கு 26.08.1950ஆம் ஆண்டு நான்­கா­வது புதல்­வ­னாக உதித்த சிவ­கு­மா­ரன் செல்­ல­மாக ‘திர­வி­யம்’ என எல்­லோ­ரா­லும் அழைக்­கப்­ப­ட்டார். யாழ். இந்­துக் கல்­லூ­ரி­யில் தனது படிப்பை முடித்­துக் கொண்டு யாழ். தொழி­ல்நுட்­பக் கல்­லூ­ரி­யில் அவர் கல்வி கற்­கும் காலப்­ப­கு­தி­யில்­தான் (1970ஆம் ஆண்டு ஆரம்­பத்­தில்) சிவ­கு­மா­ர­னு­ட­னான நட்பு எனக்கு ஏற்­பட்­டது.

கொக்­கு­வி­லில் முத்­து­கு­மா­ர­சு­வாமி என்ற ஆங்­கில ஆசி­ரி­யர் இருந்­தார். தொழில்நுட்­பக் கல்­லூ­ரி­யில் படித்­துக் கொண்­டி­ருந்த சிவ­கு­மா­ரும் அங்கு ஆங்­கி­லம் படிக்க வந்­தார். நானும் அங்கு படித்­தேன். அங்­கு­தான் சிவ­கு­மா­ர­னு­டன் நெருக்­க­மான நட்பு ஆரம்­பித்­தது. அப்­போதே ரின்­பால் பேணி­யில் வெடி­குண்டு செய்­வது பற்­றி­யெல்­லாம் பேசு­வார். எங்­க­ளுக்கு இந்த கதை­கள் புதிது. அத­னால் ஆச்­ச­ரி­ய­மாக கேட்­டுக்­கொண்­டி­ருப்­போம். தனது வீட்­டுக்கு எங்­களை கூட்­டிக்­கொண்டு சென்று வெடி­குண்டு தயா­ரிப்­பது பற்றி எங்­க­ளுக்­கும் பழக்­கி­னார்.

ஆசி­ரி­யர் முத்­து­கு­மா­ர­சு­வா­மி­யும் தமிழ் அர­சுக்­கட்­சிக்­கா­ரர். அர­சி­யல் போராட்­டத்­தில் ஆர்­வ­முள்­ள­வர். அவ­ரும் எமக்கு பல விட­யங்­களை சொல்­லித்­த­ரு­வார். அத­னால் அவ­ரது வீட்­டில் அதி­க­நே­ரம் இருப்­போம். முத்­து­கு­மா­ர­சு­வா­மி­யின் தம்பி ஆனந்­த­கு­மா­ர­சு­வா­மி­யும் தீவிர இனப்­பற்­றா­ளர். அது­போல ஞான­சுந்­த­ரம் என்ற பொலிஸ்­கா­ரர் ஒரு­வர் இருந்­தார். வன்­முறை பாதை­தான் தமி­ழர்­க­ளிற்கு தீர்வு தரு­மென்று இளை­ஞர்­கள் மத்­தி­யில் தீவி­ர­மாக பிர­சா­ரம் செய்து வந்­த­வர். இந்த மூன்று இடங்­க­ளி­லும்­தான் சிவ­கு­மா­ரன் இருப்­பார்.

எனக்கு அறி­மு­க­மாக முன்­னர் சிவ­கு­மா­ரன் வாழ்­வில் நடந்த சில சம்­ப­வ­மென நான் கேள்­விப்­பட்­டதை முத­லில் பதிவு செய்­கி­றேன். குட்­டி­ம­ணி­யின் அண்­ண­னின் மகன் ஒரு­வ­ரும் தொழில்­நுட்ப கல்­லூ­ரி­யில் படித்­துள்­ளார். இரு­வ­ருக்­கு­மி­டை­யில் நெருக்­கம் ஏற்­பட்டு, குட்­டி­ம­ணி­யின் வல்­வெட்­டித்­து­றை­யி­லுள்ள கோழிப்­பண்­ணைக்கு சென்­றி­ருக்­கி­றார்.

அப்­பொ­ழுது வல்­வெட்­டித்­து­றை­யி­லி­ருந்து கடத்­த­லில் ஈடு­ப­டு­வார்­கள். இத­னால் கடற்­ப­டை­யு­டன் முரண்­பாடு ஏற்­ப­டும். இந்த முரண்­பாட்­டை­ய­டுத்து கடற்­ப­டை­யைத் தாக்க குட்­டி­ம­ணி­யின் கோழிப்­பண்­ணை­யில் வெடி­குண்­டு­கள் செய்­துள்­ள­னர். சிவ­கு­மா­ரன் அங்கு சென்று வெடி­குண்­டு­கள் தயா­ரிக்க பழ­கி­யுள்­ளார். அவ­ரி­ட­மி­ருந்து கந்­த­கம், பொட்­டா­சி­யம் போன்ற வெடி­குண்டு தயா­ரிக்­கும் பொருள்­க­ளை­யும் சிவ­கு­மா­ரன் பெற்­றுக் கொண்­டுள்­ளார்.

சில வெடி­குண்டு, தயா­ரிக்­கும் பொருள்களை ஆனந்­த­கு­மா­ர­சு­வா­மி­யின் வீட்­டில்­தான் சிவ­கு­மா­ரன் பதுக்கி வைத்­தி­ருந்­தார். ஒரு­நாள் திடீ­ரென ஆனந்­த­கு­மா­ர­சு­வா­மி­யி­டம் வந்து, யாழ்ப்­பா­ணத்­திற்கு வரும் அமைச்­ச­ருக்கு குண்டு வைக்­கப்­போ­கி­றேன் என்­றுள்­ளார். ஆனந்­த­கு­மா­ர­சு­வாமி தடுத்­தும் சிவ­கு­மா­ரன் மனம்­மா­ற­வில்லை. பொருள்­களை எடுத்­துக்­கொண்டு போய்­விட்­டார்.

சிறிமா அர­சில் கலா­சார அலு­வல்­கள் பிர­தி­ய­மைச்­ச­ராக இருந்த சோம­வீர சந்­தி­ர­சிறி உரும்­பி­ரா­யில் உள்ள பாட­சா­லை­யொன்­றின் நிகழ்­வொன்­றிற்­காக வந்­தி­ருந்­தார். அவ­ரது காரின் பின் ரய­ரிற்கு கீழே குண்டை வைத்­துள்­ளார் சிவ­கு­மா­ரன். பிர­தி­ய­மைச்­சர் மேடை­யில் பேச்சை முடித்­த­தும், சாரதி காரை இயக்கி, பின்­னால் செலுத்த முயல, குண்டு வெடித்­துள்­ளது. வெடி­குண்டு தயா­ரிப்­பின் முதல் கால­கட்­டம் அது. அவற்­றால் பெரிய பாதிப்­புக்­கள் வராது.

சிவ­கு­மா­ரன் உரும்­பி­ராய் சந்­தி­யில் நின்று வழக்­க­மாக வீராப்­பாக பேசு­ப­வர். அத­னால் இதை செய்­தது யார் என்­ப­தில் ஊரில் சந்­தே­க­மி­ருக்­க­வில்லை. பொலி­சுக்­கும் தக­வல் போய், சிவ­கு­மா­ரன் கைதா­னார். பொலி­சார் அடித்­த­தில் தன்­னு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள் பற்றி சிவ­கு­மா­ரன் சொல்­லி­விட்­டார்.

சிவ­கு­மா­ரன் பிடி­பட்­ட­தால் எங்­க­ளுக்­கும் பிரச்­சனை வரு­மென எல்­லோ­ரும் பயந்­தோம். மறு­நாள் முத்­துக்­கு­மா­ர­சு­வா­மி­யின் வீட்­டில் கூடி, அடுத்து என்ன செய்­ய­லா­மென பேசிக்­கொண்­டி­ருந்­தோம். அப்­பொ­ழுது வீட்டு வாச­லுக்கு பொலி­சார் வந்­த­னர்.

விப­ரீ­தம் என்­பதை உணர்ந்து எல்­லோ­ரும் பின்­பக்­கத்­தால் ஓடிச்­சென்று வேலி கடந்து தப்­பித்து விட்­டோம். முத்­துக்­கு­மா­ர­சு­வாமி தானொரு ஆசி­ரி­யர் என்­ப­தால் பிரச்­ச­னை­யில்­லை­ யென நினைத்­தார். ஆனந்­த­கு­மா­ர­சு­வா­மியை தேடிய பொலி­சார், அவரை வரச்­செய்­வ­தற்­காக முத்­து­கு­மா­ர­சுவாமியை கைது செய்­து­கொண்டு சென்­ற­னர். நாங்­கள் நான்­கைந்து பேர் அதில் தப்­பித்­த­தற்கு கார­ணம், எங்­க­ளது வீடு­கள் சிவ­கு­மா­ர­னுக்குத் தெரி­யாது.

சில­நாள் தலை­ம­றை­வாக இருந்த ஆனந்­த­கு­மா­ர­சு­வாமி பின்­னர் பொலி­சில் சர­ண­டைந்­தார். விசா­ர­ணை­யின் பின் ஆனந்­த­கு­மா­ர­சு­வா­மி­யை­யும், சிவ­கு­மா­ர­னை­யும் அனு­ரா­த­புர சிறைக்கு மாற்­றி­விட்­ட­னர். சிவ­கு­மா­ரனை பிணை­யில் எடுப்­ப­தற்­காக அவ­ரது தாயா­ரு­டன் பல இடங்­க­ளுக்கும் சென்று முயற்­சி­கள் செய்­தேன். அப்­போ­தைய சட்­டத்­தின்­படி பிணை­யெ­டுப்­ப­ தென்­றால் கொழும்­பி­லுள்ள மேல்­நீ­தி­மன்­றத்­திற்­கு­தான் செல்ல வேண்­டும். அப்­பொ­ழுது மாகாண மேல்­நீ­தி­மன்­றங்­கள் கிடை­யாது. மேல்­நீ­தி­மன்­றங்­க­ளில் எல்லா சட்­டத்­த­ர­ணி­க­ளும் வாதா­ட­வும் முடி­யாது.

சிவ­கு­மா­ர­னின் தாயா­ரும் நானும் அமிர்­த­லிங்­கத்­தி­டம் சென்று விட­யத்தை சொன்­னோம். நீலன் திருச்­செல்­வத்­தின் தந்­தை­யார் திருச்­செல்­வத்­திற்கு ஒரு கடி­தம் தந்து அனுப்­பி­னார்.

கொழும்­பி­லி­ருந்த திருச்­செல்­வத்­தின் வீட்­டுக்கு சென்­றோம். அது பெரி­ய­தொரு மாளிகை. அழைப்பு மணியை அழுத்த, வெளி­யில் வந்­தார். கடி­தத்தை கொடுத்­தோம். படித்­து­விட்டு, ‘எங்­களை கேட்டோ குண்டு வைச்­ச­னீங்­கள்’ என பேசி­னார். ஒரு மாதிரி அவரை சமா­ளித்து, அவரை முன்­னி­லை­யாக வைத்­தோம். சிவ­கு­மா­ரன் பிணை­யில் விடு­த­லை­யா­னார்.

என்­னு­டைய அப்பா ஒரு ஆசி­ரி­யர். சாத்­தி­ர­மும் பார்ப்­பார். பிர­ப­ல­மான உல­கத்­த­லை­வர்­கள் பற்­றிய சோதிட குறிப்­பை­யும் அப்பா வைத்­தி­ருந்­தார். எனக்கு இன்­று­வரை சாத்­தி­ரத்­தில் நம்­பிக்­கை­யில்லை. மகன் சிறை­யில் இருந்­த­போது, அவ­ரது குறிப்பை எனது தந்­தை­யா­ரி­டம் காட்ட சிவ­கு­மா­ர­ னின் தாய் விரும்­பி­னார்.

சிவ­கு­மா­ர­னின் தாய் எனது வீட்­டுக்கு வந்­தால், நான் வீட்­டில் அகப்­பட்டு விடு­வேன். நான் படிக்­கி­றேன் என்று மட்­டும்­தான் வீட்­டில் நினை த்­தார்­கள். அத­னால் சிவ­கு­மா­ர­ னின் குறிப்பை என்­னி­டம் தாருங்­கள், கேட்டு சொல்­கி­றேன் என வாங்­கிக்­கொண்டு வந்­தேன். அப்­பா­வி­டம் அந்த குறிப்பை கொடுத்­தேன். பார்த்­து­விட்டு முதல் சொன்ன வார்த்தை- ‘இவ­னின் சாத­க­மும் ஹிட்­ட­ல­ரின் சாத­க­மும் ஒன்­று­தான்’. திடீ­ரென எல்­லோ­ர­தும் கவ­னத்தை ஈர்த்து மறை­வான் என்­றார்.

ஒரு­நாள், பல்­க­லை­க­ழ­கத்­தில் தமிழ் மன்ற செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­டுப் படிப்பை முடித்து வந்­தி­ருக்­கும் உரும்­பி­ரா­யைச் சேர்ந்த நண்­பர் ஒரு­வரை சந்­திக்க வரு­மாறு சிவ­கு­மா­ரன் கேட்­டார். அந்த நண்­ப­ரும் போராட்­டத்­தில் தீவிர ஆர்­வ­முள்­ள­வர் என்­றார். அவ்­வாறு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­வர் சத்­தி­ய­சீ­லன் என்­ப­வ­ரா­வார்.

அந்­தக் கால­கட்­டத்­தில் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க அர­சி­னால் பல்­க­லை­க­ழ­கத் தரப்­ப­டுத்­தல் முறை அறி­மு­க­மா­னது. இன­ரீ­தி­யான தரப்­ப­டுத்­தல்­தான் முத­லில் அறி­மு­க­மா­னது. இத­னால் எனது பல்­க­லை­க­ழக வாய்ப்­பும் தவ­றி­யது. தரப்­ப­டுத்­தலுக்கு எதிர்ப்புத் தெரி­விக்க வேண்­டு­மென முடி­வு­செய்­தோம். இது தொடர்­பாக ஆர்­வ­முள்ள பலரை இணைத்து ஒரு ஆலோ­சனை கூட்­டம் நடத்­தி­னோம்.

மலா­யன் கபேக்கு மேலி­ருந்த மண்­ட­பத்­தில் கூட்­டம் நடந்­தது. சத்­தி­ய­சீ­லன், மாவை, லோரன்ஸ், மகா உத்­த­மன், அரி­ய­ரட்­ணம் (புன்­னா­லை­கட்­டு­வன்), இலங்கை மன்­னன், முத்­து­கு­மா­ர­சு­வாமி, சந்­தி­ர­கு­மார் (பிரான்ஸ்), சபா­லிங்­கம், பல­ந­ட­ராஜ ஐயர் எனப் பலர் கூட்­டத்­திற்கு வந்­தி­ருந்­த­னர். மாண­வர் பேர­வை­யென செயற்­ப­டு­வது, தரப்­ப­டுத்­த­லுக்கு எதி­ராக போராட்­டம் செய்­வ­தென முடிவு செய்­தோம்.

இந்த மாண­வர் பேரவை உயர்­தர மாண­வர்­கள் பலரை ஒன்­று­தி­ரட்டி தரப்­ப­டுத்­த­லிற்கு எதி­ராக மாபெ­ரும் ஊர்­வ­லத்­தினை நடாத்­தி­யது மட்­டு­மல்­லா­மல் அத­னைத் தொடர்ந்து ஆயு­தப் போராட்­டத்­தினை தொடர்ந்து சுமந்து சென்ற அமைப்­பா­க­வும் அமை­கின்­றது. மாண­வர் பேர­வை­யின் தரப்­ப­டுத்­த­லிற்­கெ­தி­ரான போராட்­டங்­க­ளில் சிவ­கு­மா­ர­னின் பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­யது.

1976ஆம் ஆண்டு சிங்­கள அர­சு­டன் சேர்ந்து நடக்­கும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களை எதிர்க்க வேண்­டு­மென்ற நோக்­கில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யினை யாழ்ப்­பா­ணத்­தில் ஏற்­ப­டுத்த அனு­ச­ர­ணை­யா­கச் செயற்­பட்ட யாழ் மேயர் அல்­பி­ரட் துரை­யப்­பா­வி­னைக் கொலை செய்­வ­தற்கு யாழ் வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப் பாட­ச­லை­யின் முன்பு எடுத்த முயற்­சி­யும் வாக­னம் சேத­ம­டைந்­த­தோடு துரை­யப்பா கால­தா­ம­த­மாக வந்­த­தால் உயிர் பிழைக்க வைத்­தது.

இந்­தக் கொலை முயற்­சி­யைத் தொடர்ந்­தும் சிச­வ­கு­மா­ரன் யாழ் சிறை­யி­லும், அனு­ரா­த­பு­ரம் சிறை­யி­லும் ஒன்­றரை வரு­டங்­க­ளிற்கு மேலா­கக் கைதி­யாக இருந்­தார்.

1974ஆம் ஆண்டு தை மாதத்­தில் யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெற்ற உல­கத் தமிழ் ஆராய்ச்சி மகா­நாட்­டில் தீவிர தொண்­ட­னா­கக் கட­மை­யாற்­றிய சிவ­கு­மா­ரன் மகா நாட்­டின் இறுதி நாள் அன்று பொலி­சா­ரி­னால் நடத்­தப்­பட்ட அடா­வ­டித்­த­னத்­தினை நேரில் பார்­வை­யிட்ட சிவ­கு­மா­ரன் அதற்­குப் பொறுப்­பா­ன­வர்­க­ளைப் பழி வாங்­கியே தீரு­வே­னென்று அன்றே சப­த­மெ­டுத்­துக் கொண்­டார்.

அந்த உள்­ளக் கொதிப்­பின் விளைவே தமிழ் ஆராய்ச்சி மகா­நாட்டு அசம்­பா­வி­தத்­திற்­குப் பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் சந்­தி­ர­சிறி மீது சிவ­கு­மா­ரன் குண்டு வீச்சு நடத்தி சுட முற்­பட்­ட­ மைக்­குக் கார­ண­மா­கும். அந்தச் சம்­ப­வம் வெற்­றி­ய­ளிக்­கா­விட்­டா­லும் எப்­ப­டியோ பழி­வாங்­கியே தீரு­வேன் என்ற முனைப்­பு­டன் செயற்­பட்­ட­தன் விளைவே சிவ­கு­மா­ரன் தமிழ் ஆராய்ச்சி மகா­நாடு நடை­பெற்று ஆறு மாதத்­திற்­குள்­ளேயே தன்­னு­யி­ரைக் காவு கொடுக்­கும் நிலைக்கு இட்­டுச் சென்­றது.

பொலிஸ் தேடு­தல்­க­ளி­லி­ருந்து ஒழிந்து வாழ வேண்­டிய நிலை மற்­றும் தனது தீவிர செயற்­பா­டு­க­ளிற்கு நிதி ஒரு தடை­யாக இருந்த சூழ­லில் பல­ரி­டம் சென்று நிதி­யு­த­வி­கேட்­டும் எல்­லோ­ரும் கைவி­ரித்த நிலை­யி­லேயே கோப்­பாய் கிரா­மிய வங்­கி­யில் பணத்­தைத் திரு­டு­வ­தற்கு சிவ­கு­மா­ரன் முடி­விற்கு வந்­தார்.

அது­வும் அந்த வங்­கி­யில் வேலை செய்த ஒரு ஊழி­ய­ரின் தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான்; அங்­குள்ள பணத்­தைக் கொள்­ளை­யி­டு­வ­தற்­குத் திட்­ட­மிட்­டார். இருந்­தும் அந்­தச் செயற்­பாடு அவ­ரிற்­குக் கால­னாக மாறி­விட்­டது. காலில் ஏற்­க­னவே இருந்த காயத்­து­டன் வங்­கி­யில் கொள்­ளை­யிட முற்­பட்ட போது உசா­ர­டைந்த ஊழி­யர்­க­ளின் செயற்­பாட்­டி­னால் இவர் வங்­கி­யி­லி­ருந்து ஓடிச் செல்ல வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

அப்­போது பொலி­சா­ரும் பின் தொட­ரவே தோட்­டங்­களுக்கு கூடாக ஓடிய சிவ­கு­மா­ரன் காலில் ஏற்­க­னவே இருந்த காயத்­தில் மர­வள்­ளிக் கட்டை ஏறி­ய­தன் விளை­வா­கத் தொடர்ந்து ஓட முடி­யா­மல் நின்ற போது பொலி­ஸார் அவரை நெருங்­கிய போது சிவ­கு­மா­ரன் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வ­ரின் தன்­னி­யக்­கத் துப்­பாக்­கி­யி­னைப் பறித்து அவ­ரைச் சுட முயன்­றி­ருக்­கி­றார்.

அப்­போது பொலிஸ் அதி­காரி தனக்கு மூன்று பெண் பிள்­ளை­கள் என்­றும் அவர்­க­ளு­டைய தாயா­ரும் இறந்து விட்­ட­தா­க­வும் தானும் இறந்­தால் அந்தப் பிள்­ளை­கள் அநா­தை­க­ளாகி விடு­வார்­க­ ளென்று கெஞ்­சி­ய­தன் அடிப்­ப­டை­யில் அவ­ரைச் சுடாது தன்­னி­ட­மி­ருந்த சய­னைட்டை தானே அருந்­தித் தன்­னு­யிரை மாய்த்­துக் கொண்­டார்.

சிவ­கு­மா­ரன் வைத்­தி­ய­சா­லை­யில் இறந்த பின்பு அவ­ரது கைக் கடி­கா­ரம் மற்­றும் அவ­ரது காற்­சட்­டைப் பையி­லி­ருந்த பணம் ஆகி­ய­வற்றை சிவ­கு­மா­ர­னின் தந்­தை­யி­டம் கைய­ளித்­து­விட்டு ‘‘உங்­கள் மகன் ஓர் தெய்­வப் பிறவி நினைத்­தி­ருந்­தால் என்­னைச் சுட்­டி­ருக்­க­லாம்’’ எனக் கூறி அவ­ரது காலில் வீழ்ந்து வணங்­கி­னா­ராம் அந்­தப் பொலிஸ்.
சிவ­கு­மா­ரன் ஓர் ஆயு­தப் போராளி மட்­டு­மல்ல.

தமி­ழர்­கள் மத்­தி­யி­லி­ருந்த சீர்­கே­டு­ களை, குறிப்­பாக சாதிக் கொடு­மை­களை இள வய­தி­லி­ருந்தே எதிர்த்து வந்த ஒரு­வர். தன் இளம் வய­தி­லேயே உரும்­பி­ராய் வை­ர­வர் கோவி­லில் சம­பந்தி போஷ­னத்தை நடாத்தி இளை­ஞர்­க­ளி­டையே எழுச்­சியை உரு­வாக்­கி­ய­வர். அத்­து­டன் சாவு வீடு­க­ளில் பறை மேளம் அடிப்­ப­தைத் தடுத்து நிறுத்த வேண்­டு­மென்ற முயற்­சி­யில் உரும்­பி­ரா­யி­லுள்ள அந்த சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி பறை மேளங்­களை உரும்­பி­ராய் சந்­தி­யில் போட்டு உடைத்து எரித்­தார்.

தமிழ் மக்­கள் போராட்ட வளர்ச்சி என்­பது ஒரு வகை­யான அஞ்­ச­லோட்­டம். அந்த அஞ்­ச­லோட்­டத்­தில் ஆயு­தப் போராட்­ட­மென்ற அஞ்­ச­லோட்­டத்தை ஆரம்­பித்து வைத்­தது சிவ­கு­மா­ர­னென்­றால் அது மிகை­யா­காது. தியாகி சிவ­கு­மா­ரன் தமிழ் மக்­க­ளின் உரி­மைப்­போ­ராட்­டத்­தின் வர­லாற்­றுச் சின்­ன­மாக நிலைத்து நிற்­பா­னென்­பது திண்­ணம்.

கட்­டு­ரை­யா­ளர்:எதிர்க்­கட்­சித் தலை­வர்
வடக்கு மாகாண சபை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close