பொலிஸ் பாதுகாப்புடன் – பொதுபலசேனா அமைப்பின் மாநாடு!!

பொதுபலசேனா அமைப்பின் ஏற்பாட்டில் 10 ஆயிரம் பௌத்த பிக்குகள் பங்கேற்கும் பேரணி கண்டியில் நடத்தப்படவுள்ளதால், அங்கு பெரும் எண்ணிகையான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக பொதுபலசேனா அமைப்பு ஏற்பாடு செய்த இந்த மாநாடு இன்று பிற்பகல் 2 மணிக்கு கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தலதா மாளிகையில் நடக்கும் வழிபாடுகளை அடுத்து ஆரம்பமாகும் இந்த மாநாட்டில், மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பௌத்த பிக்குகள் பங்கேற்கவுள்ளதால், 500 பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், விசேட அதிரடிப்படையின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டினால், பதற்றநிலை ஏற்படக் கூடும் என்பதால் முஸ்லிம்கள் தங்களின் வர்த்தக நிலையங்களை மூட முடிவு செய்துள்ளனர்.

You might also like