மகிந்­தவை இந்­தி­யா­வுக்கு அழைக்­கின்­றது மோடி அரசு

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச இந்­தி­யா­வுக்கு அழைக்­கப்­பட்­டுள்­ளார். அடுத்த மாதம் 14ஆம் திகதி அவ­ரது பய­ணம் இடம்­பெ­றும் என்று கூறப்­ப­டு­கின்­றது.

இந்­தி­யா­வின் மகா­ராஷ்டிரா மாநி­லத்­தில் நடை­பெ­றும் பௌத்த நிகழ்­வில் கலந்து கொள்­வ­தற்கு அழைக்­கப்­பட்­டுள்ள முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, இந்த நிகழ்­வின் பின்­னர் இந்­திய நடு­வண் அர­சின் முக்­கிய தலை­வர்­க­ளு­டன் பேச்சு நடத்­த­வுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

இலங்கை அரசு சீனா­வின் பக்­கம் சாய்ந்­து­விட்­ட­தாக புது­டில்லி உணர்­வ­தா­லேயே இந்த அதி­ரடி இரா­ஜ­தந்­திர காய்­ந­கர்த்­த­லுக்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது. தமது பக்­கம் இலங்கை அரசை வளைத்­துப் போடு­வ­தற்கு, மகிந்­தவை ஆயு­த­மா­கப் பாவிப்­ப­தற்கு புது­டில்லி தீர்­மா­னித்­துள்­ளது. அதன் கார­ண­மா­கவே மகிந்த இந்­தி­யா­வுக்கு அழைக்­கப்­பட்­டுள்­ளார்.

மகிந்த ஆட்­சி­யில் இருந்­த­போது சீனா­வின் பக்­கம் சாய்ந்து செயற்­பட்­டார் என்­ப­தால், இந்­தியா அவர் மீது அதி­ருப்­தி­யில் இருந்­தது. மகிந்த ராஜ­பக்ச அவ­ரது சகோ­த­ரர் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோர் கூட இந்­தக் குற்­றச்­சாட்டை பகி­ரங்­க­மாக முன்­வைத்­தி­ருந்­த­னர்.

தற்­போது இலங்கை அர­சும் அதே­பா­ணி­யில் செயற்­ப­டு­வ­தால், அதனை தமது பக்­கத்­துக்கு திருப்­பு­வ­தற்கு இந்­தியா இந்த முயற்­சி­யைக் கையி­லெ­டுத்­துள்­ளது. இலங்­கைக்கு கடந்த மே மாதம் வருகை தந்த இந்­திய தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி, மகிந்த ராஜ­பக்­சவை தனியே சந்­தித்­துப் பேசி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like