மட்டக்களப்பில் இன்று ஏர்பூட்டு விழா

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் ஏர்பூட்டு விழா ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய ஏர்பூட்டு குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்களினால் பூமாதேவிக்கான பூசைகள் மேற்கொள்ளப்பட்டன.

பூசைகளை தொடர்ந்து கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வண்ணக்கர் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் ஏர்பிடித்து வயலை உழுது ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், விவசாயிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

You might also like