மது போதையில் கலாட்டா – வெளியேற்றப்பட்ட 140 பயணிகள்!!

பிரிட்டனின் பிரிஸ்டல் வானூர்தி நிலையத்தில் இருந்து செக் குடியரசு செல்லும் வானூர்தியில் சுற்றுலாப்பயணிகள் சிலர் அதிக மதுபோதையில் கலாட்டா செய்ததை அடுத்து குறித்த வானூர்தியின் மொத்த பயணிகளும் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிஸ்டல் வானூர்தி நிலையத்தில் இருந்து செக் குடியரசின் பிராகா பகுதிக்கு 140 பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது வானூர்தி. இந்த நிலையில் சில பயணிகள் அதிக மது போதையில் கலாட்டாவில் ஈடுபட்டதுடன், வானூர்தியை இரவு விடுதி போன்று பயன்படுத்த தொடங்கினர்.

இது எஞ்சிய பயணிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தவே அவர்கள் உடனடியாக வானூர்தி நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் கலாட்டாவில் ஈடுபட்ட பயணிகளை அமைதி காக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் நிர்வாகிகளின் பேச்சுக்கு கட்டுப்படமறுத்த அவர்கள் தொடர்ந்து கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த குழுவில் முக்கியமான நபரை பொலிஸார் வானூர்தியில் இருந்து வெளியேற்றினர்.

தொடர்ந்து குறித்த வானூர்தி புறப்படத் தாமதமாகும் எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனிடையே எஞ்சிய பயணிகள் தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர கோரி வானூர்தி நிலைய  அதிகாரிகளை அணுகியுள்ளனர்.

அவர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவுகளை ஏற்பாடு செய்து அளித்துள்ளனர். இந்த நிலையில் வானூர்தி மேலும் காலதாமதம் ஆகும் என முடிவான நிலையில், குறித்த வானூர்தியை ரத்து செய்வதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் 140 பயணிகளும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவம் மிக அரிது எனவும், எதிர்காலத்தில் இவ்வாறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும் நிர்வாகம் எஞ்சிய பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close