மந்­திகை மருத்­து­வ­ம­னையில் சிறப்புப் போசாக்கு நிபு­ணர்

வட­ம­ராட்சி மந்­திகை மருத்­து­வ­ம­னைக்கு முதல் முறை­யாக போசாக்கு மருத்­துவ நிபு­ணர் ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இவர் தனது கட­மை­க­ளை நேற்று பொறுப்­பேற்­றார்.

மருத்­து­வ­ம­னைக்கு பெரு­ம­ளவு போசாக்கு குறைந்த சிறு­வர்­கள், கர்ப்­பி­ணி­கள, முதி­யோர்­கள் சிகிச்சை பெற வரு­கின்­ற­னர்.

இவர்­க­ளுக்­குச் சிகிச்சை வழங்க தனி­யான போசாக்கு மருத்­துவ நிபு­ணரை நிய­மிக்­க­வேண்­டு­மென மருத்­து­வ­மனை நிர்­வா­கத்­தி­னர் சுகா­தார அமைச்­சி­டம் கேட்டிருந்­த­னர்.

இத­னை­ய­டுத்து சுகா­தார அமைச்­சி­னால் அதற்­கான மருத்­துவ நிபு­ணர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.
போசாக்கு மருத்­துவ நிபு­ண­ரின் சேவை தின­மும் காலை 8.00 மணி தொடக்­கம் மதி­யம் 12.00 மணி­வ­ரை­யும், பி.ப.2.00 மணி தொடக்­கம் மாலை 4.00 மணி­வ­ரை­யும் இடம்­பெ­றும்.

போசாக்கு மருத்­துவ நிபு­ண­ரி­டம் சிகிச்­சை­பெற விரும்­பும் ஏனைய பிர­தே­சத்­த­வர்­கள் தத்­த­மது பிரிவு மருத்­துவ அதி­கா­ரி­யி­டம் அனு­ம­திக்­க­டி­தம் பெற்று வரு­மாறு மருத்­து­வ­மனை செய்­திக் குறிப்­பில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்.போதனா மருத்­து­வ­ம­னைக்கு அடுத்­த­தாக மந்­திகை ஆதார மருத்­து­வ­ம­னைக்கு போசாக்கு மருத்­துவ நிபு­ணர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­ டத்­தக்­கது.

You might also like