side Add

மரதன் ஓட்டப் போட்டி!!

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் முதலாம் வருட ஆசிரிய மாணவர்களுக்கான வருடா வருடம் இடம்பெறும் மரதன் ஓட்டப் போட்டி இன்று நடைபெற்றது.

முதலாம் வருட ஆசிரிய மாணவர்களில் 50 ஆண்களும், 223 பெண்களும் போட்டியில் பங்குபற்றினர்.

ஆண் ஆசிரிய மாணவர்களில் உடற்கல்வி பாடத்துறையைச் சேர்ந்த எஸ். விதுசன் முதலாம் இடத்தையும், விவசாயத்துறையைச் சேர்ந்த எம்.பூவரசன் இரண்டாம் இடத்தையும், உடற்கல்வி துறையைச் சேர்ந்த எ.கிரியோன் குரூஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

பெண் ஆசிரிய மாணவர்கள் சார்பாக உடற்கல்வித் துறையைச் சேர்ந்த பி.சோபனா முதலாம் இடத்தையும், இந்துசமய துறையைச் சேர்ந்த கே.கயல்விழி இரண்டாம் இடத்தையும், உடற்கல்வித் துறையைச் சேர்ந்த எ.யூஜினா மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வு பெற்ற பீடாதிபதி கு.த.சிதம்பரநாதன் விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றிபெற்ற வீர்ர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

 

You might also like