ஆரோக்கியம் நிறைந்த அரிய வகைப் பழங்கள்

0 272

அரிய வகைப் பழங்களில்தான் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்த வகைப் பழங்களின் சுவை, சத்துகள் குறித்த யோசனையால் அந்தப் பழங்களை வாங்குவதில் நமக்குக் கொஞ்சம் தயக்கமும் ஏற்படுகிறது.

ஆனால் அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன.

அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன.

இலந்தைப்பழம்

சிறிய அளவில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை அதன் வித்துதான் அடைத்துக்கொண்டிருக்கும்.

கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும்.

இனிப்பும், புளிப்பும் கலந்த இருசியுடன் காணப்படும் இப் பழத்தில் விட்டமின் ‘ஏ’ சத்தும் சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் பெறவும் இலந்தைப்பழம் உதவிபுரிகிறது.

இது உடல் சூட்டை சமப்படுத்தும். தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். அடிக்கடி வாந்தி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.

களாப்பழம்

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில் காணப்படும். களாக்காயாக இருக்கும்போது ஊறுகாய் போட பயன்படுகிறது. இது புளிப்புச் சுவையுடன் காணப்படும்.

நன்றாகக் கனிந்த களாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. இதில் விட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை களாப்பழத்திற்கு உண்டு. உணவு உண்டபின் இந்தப் பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும்.

உடல் சூடு காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம் குணப்படுத்துகிறது. உடல் சூட்டினை சமன்படுத்தும் தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு.

ஆல்பக்கோடா பழம்

மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்தப் பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் விட்டமின் ‘ஏ’,‘பி’ உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத் தரும். குருதியை விருத்தி செய்யும்.

காய்ச்சலின் போது இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும். நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும். தலைவலியைக் குணப்படுத்தும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் சொறி, சிரங்கு உடனடியாகக் குணமடையும்.

வேப்பம்பழம்

வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து தானாகவே கீழே விழும். பழங்கள் இனிப்பாக இருக்கும்.

வேப்பம் பழம் பித்தத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல் பாதுகாக்கும். சொரி, சிரங்கு மற்றும் தோல்நோய்களைக் குணப்படுத்தும்.

பழம் உதிரும் சீசனில் நன்றாகக் கனிந்த பழங்களை சேகரித்து அதை நீர் விட்டு கழுவி தோலையும், கொட்டையும் எடுத்துவிட்டு சுத்தமான துணியில் வடிகட்டி எடுக்கவும். எந்த அளவிற்கு பழச்சாறு இருக்கிறதோ அந்த அளவிற்குச் சர்க்கரையைச் சேர்த்து சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு, அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும்.

பாகுபதம் வந்த சமயம் இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில் ஊற்றிவைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான வியாதிகள் குணமடையும். பித்தம் தொடர்பான நோய் தீரும்.

டிராகன் பழம்

விந்தையான தோற்றம் கொண்ட இப்பழம், தித்திக்கும் சுவையை அளிப்பது.

இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க டிராகன் பழம் உதவுகிறது.

ரம்புட்டான் பழம்

ரம்புட்டான் பழம் தெற்காசியாவைத் தாயகமாகக் கொண்டது.

இந்தப் பழத்தில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் நிறைந்துள்ளது.

எனவே இது நீரிழிவு மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

கிவி

கிவி பழமும் மிகவும் சுவையானது.

இப் பழத்தில் விட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளதால், கொலஸ்ட்ரோலைக் குறைக்க உதவுகிறது.

ஆலிவ்

பல்வேறு நிறங்களில் உள்ள ஆலிவ் பழங்களில் கருப்பு மற்றும் பச்சை நிறமுள்ள ஆலிவ் பழங்கள்தான் மிகவும் சிறந்தவை.

இவற்றை உட்கொண்டால் எலும்புகள் வலிமையடையும், புற்றுநோய் தடுக்கப்படும்.

பேசன் பழம்

பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட இந்தப் பழம், நார்ச்சத்து அதிகம் நிறைந்த மென்மையான சதைப்பகுதியைக் கொண்டது.

இது புற்றுநோய் மற்றும் தூக்கமின்மைப் பிரச்சினையைக் குணமாக்குவதில் மிகவும் சிறந்தது.

மங்குஸ்தான் பழம்

உள் சதையயைப் பார்க்கும்போது, ரம்புட்டான் பழம்போல் தோற்றம் கொண்ட இந்த மங்குஸ்தான் பழம் சிறந்த மருத்துவக் குணம் கொண்டது.

குறிப்பாக இது வயிற்றுப்போக்குக்கு உடனடி தீர்வளிக்கிறது.

You might also like