மாகா­ணத் தேர்­தல் தொடர்பில் இழு­பறி

எல்லை நிர்­ணய அறிக்­கையை விவா­தத்­துக்கு எடுக்க தீர்­மா­னம்

மாகாண சபைத் தேர்­தல் முறைமை தொடர்­பாக இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டா­ததை அடுத்து தற்­போ­துள்ள எல்லை நிர்­ணய அறிக்­கையை விவா­தத் துக்கு எடுப்­பது என்று நேற்று நடந்த கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அந்த அறிக்­கையை நிறை­வேற்ற மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை அவ­சி­யம். அந்­தப் பெரும்­பான்மை கிடைக்­கா­விட்­டால் பழைய முறை­யின் கீழ் தேர்­தலை நடத்­த­லாம் என்­றும் தீர்­மா­னிக்­கப் பட்டுள்­ளது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் கட்­சித் தலை­வர்­கள் கூட்­டம் நேற்று நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யில் நடை­பெற்­றது.

அதில் தேர்­தல் முறைமை தொடர்­பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. பழைய முறை­யில் தேர்­தலை நடத்த வேண்­டும் என்று சிறு­பான்­மைக் கட்­சி­கள் வலி­யு­றுத்­தின. புதிய முறை­யில் தேர்­தலை நடத்த வேண்­டும் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும், மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் வலி­யு­றுத்­தின. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், கூட்டு எதி­ர­ணி­யும் எந்த முறைமை என்­றா­லும் பர­வா­யில்லை, உடன் தேர்­தலை நடத்த வேண்­டும் என்ற கருத்­தில் இருந்­தன.

இந்த விட­யத்­தில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. அதை­ய­டுத்து தற்­போ­தைய எல்லை நிர்­ணய அறிக்­கையை விவா­தத்­துக்கு எடுத்து அது நிறை­வேற்­றப்­பட்­டால் புதிய முறை­மை­யில் தேர்­தலை நடத்­து­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அது நிறை­வேற்­றப்­ப­டா­விட்­டால் பழைய முறை­யில் தேர்­தலை நடத்­து­வது என்­றும் முடி­வெ­டுக்­கப்­பட்­டது. அறிக்கை மீதான விவாத்­துக்­கான திக­தியை அறி­விக்­கு­மாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபா­நா­ய­க­ரி­டம் கோரி­யுள்­ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close